காதல் திருமணம் செய்துகொண்ட இளசுகள்; மணமகனின் பெற்றோரை அடித்து காலில் விழவைத்த கிராம மக்கள்

காதல் திருமணம் செய்துகொண்ட இளசுகள்; மணமகனின் பெற்றோரை அடித்து காலில் விழவைத்த கிராம மக்கள்

Published : Jan 24, 2024, 11:04 AM IST

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞனின் பெற்றோரை சரமாரியாக தாக்கிய காதலியின் உறவினர்கள் ஊர் மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் பார்த்தசாரதி. அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகள் சுசித்ரா இருவரும் ஒரே  சமூகத்தைச் சேர்நதவர்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பார்த்தசாரதி, சுசித்ரா  இருவரும் காதலித்து வந்த நிலையில் வீட்டை  விட்டு வெளியேறி அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் பார்த்தசாரதி மற்றும் அவரது உறவினர்களை  வீடு புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் பார்த்தசாரதியின் தந்தையான அண்ணாதுரையை அரைகுறை ஆடையுடன் பஞ்சாயத்தில் அமர வைத்து கிராம முக்கியஸ்தர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

தாக்குதல் வீடியோ வைரலான நிலையில் இது குறித்து வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட அண்ணாதுரை மற்றும் அவரது  மனைவி பிரேமாவிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பிரேமா அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முனுசாமி, கவியரசி, ராமானுஜம்  ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

01:29நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போதே மயங்கி விழுந்த காவல் உதவி ஆய்வாளர்
03:10இரண்டாவதும் பெண் குழந்தையா? கர்ப்பிணியை தாக்கி கொடுமை படுத்திய கொடூரன் - பெண் கதறல்
02:05கடலூரில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த வெள்ளை நிற நாகம்; லாகவமாக மீட்ட பாம்பு பிடி வீரர்
00:44வடலூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்; வீடியோ வெளியாகி பரபரப்பு
01:19காதல் திருமணம் செய்துகொண்ட இளசுகள்; மணமகனின் பெற்றோரை அடித்து காலில் விழவைத்த கிராம மக்கள்
02:15கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்களிடையே தள்ளு முள்ளு; பேருந்தை இயக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
03:03Arudra Darisanam: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
00:28Natarajar Temple: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
01:54தூய்மை பணியாளர்களுக்கு சந்தன மாலை அணிவித்து, ஆடை வழங்கி கௌரவித்த பாஜகவினர்