அரசுப்பேருந்தை நிறுத்தி தாக்கிக்கொண்ட மாணவர்கள்; பெண்கள் அலறல்

அரசுப்பேருந்தை நிறுத்தி தாக்கிக்கொண்ட மாணவர்கள்; பெண்கள் அலறல்

Published : Jul 21, 2023, 10:30 AM IST

சிதம்பரம் அருகே அரசு பேருந்தை நிறுத்தி மாணவர்கள் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில், பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகருக்கு பள்ளி, கல்லூரி வருவதற்கு சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளான புவனகிரி, காட்டுமன்னார்கோயில், முட்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் நேற்று மாலை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து புவனகிரி வழியாக பூவாலை வரை செல்லும் தடம் எண் 7 அரசு பேருந்து மேலரத வீதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது மாணவர்கள் பேருந்தை நிறுத்தி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். 

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதால் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பேருந்தில் ஏறி மாணவர்களை தடுத்து சமாதானப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருவது மற்ற மாணவர்கள், மாணவிகள், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

03:43100 சதவீத வாக்குப்பதிவு; வெள்ளி கடற்கரையில் மணல் சிற்பம் - மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய ஆட்சியர்
01:29நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் போதே மயங்கி விழுந்த காவல் உதவி ஆய்வாளர்
03:10இரண்டாவதும் பெண் குழந்தையா? கர்ப்பிணியை தாக்கி கொடுமை படுத்திய கொடூரன் - பெண் கதறல்
02:05கடலூரில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த வெள்ளை நிற நாகம்; லாகவமாக மீட்ட பாம்பு பிடி வீரர்
00:44வடலூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்; வீடியோ வெளியாகி பரபரப்பு
01:19காதல் திருமணம் செய்துகொண்ட இளசுகள்; மணமகனின் பெற்றோரை அடித்து காலில் விழவைத்த கிராம மக்கள்
02:15கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்களிடையே தள்ளு முள்ளு; பேருந்தை இயக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
03:03Arudra Darisanam: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
00:28Natarajar Temple: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
01:54தூய்மை பணியாளர்களுக்கு சந்தன மாலை அணிவித்து, ஆடை வழங்கி கௌரவித்த பாஜகவினர்