நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம்: சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானது !!

Jun 6, 2023, 12:03 AM IST

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் மாதம் வரை குழந்தை திருமணம் நடைபெற்றதாக அவர்களின் பெற்றோர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை எனவும் பொய்யாக வழக்கு பதிவு செய்து தீட்சிதர்களை கைது செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகளுக்கு உச்ச மற்றும் உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடைபெற்றுள்ளதாகவும் தமிழக ஆளுநர் குற்றம் சாட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியது. கடந்த 24 ஆம் தேதி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்  சிதம்பரம் வருகை புரிந்து விசாரணை செய்தது. அதில் ஆளுநர் குற்றச்சாட்டு உண்மை என தெரிவித்திருந்தார்.

குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்தது எனவும் சம்பந்தப்பட்ட குழந்தைகளிடம் நேரில் விசாரணை செய்யும் பொழுது தங்களுக்கு திருமணம் நடைபெறவில்லை எனவும் காவல்துறை கட்டாயத்தின் பேரில் தங்களுக்கு நடைபெற்றதாக கூறியதாகவும்  அவர் தெரிவித்திருந்தார் இந்நிலையில்  குழந்தை திருமணம் நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

அதற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் அந்தப் புகைப்படம் குழந்தை திருமணத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை எனவும் அது தீட்சிதர்கள் குடும்பத்தில் நடைபெறும் வயது வந்தோருக்கான சடங்கு நிகழ்வு என பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் திருமணம் நடைபெற்ற பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..பெருமாள் கோவிலில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதா? அன்று தஞ்சாவூர்! இன்று சென்னையா? கொதிக்கும் ஆர்வலர்கள்