அரியலூர் அருந்தவ நாயகி உடனுறை கோவில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நதிகளில் இருந்து பெறப்பட்ட புனித நீர், யானை மீது ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
அரியலூர் நகரில் பல நூறு ஆண்டுகள் பழமையான அருந்தவ நாயகி உடனுறை ஆலந்துறையார் திருக்கோயில் அமைந்துள்ளது. கோவிலின் குடமுழுக்கு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு கங்கை, யமுனை, சரஸ்வதி, ஆகிய புன்னிய நதிகளில் இருந்து புனித நீரானது எடுத்துவரப்பட்டு யானை மீது வைத்து நகரில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலில் அடைந்தனர்.
ஊர்வலத்தின் போது தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம் சுருள்வீச்சு கோலாட்டம் குதிரை ஆட்டம் உள்ளிட்ட விளையாட்டுக்கள் நடைபெற்றன.இதில் ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர்