Watch : அரியலூர் அருகே மேய்ச்சலில் இருந்த ஆடுகள் மீது லாரி மோதியதில் 20 ஆடுகள் பலி! - மக்கள் போராட்டம்!

Apr 11, 2023, 10:49 AM IST

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேச்சலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தஞ்சை சாலையில் உள்ள முடிகொண்டான் கிராமம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 20 ஆடுகள் உயிரிழந்தன. 10 ஆடுகள் காயமடைந்தன.


இதனையடுத்து கிராம பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமானூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர். இதனால் அரியலூர் – தஞ்சாவூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.