தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வுக்கு சுமார் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 8.17 பேர் எழுதியுள்ளனர். இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.

10:00 PM (IST) May 07
காங்கிரஸின் 1 மில்லியன் வேலை வாய்ப்புகளைக் குறிப்பிட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
09:06 PM (IST) May 07
இந்திய வாட்ஸ்அப் பயனர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர் நிபுணர்கள்.
08:37 PM (IST) May 07
கோவை கடை வீதியில் உள்ள துணிக் கடையின் பூட்டை உடைத்து துணிகள் திருடி செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
07:33 PM (IST) May 07
குஜராத் மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
06:55 PM (IST) May 07
கோவையில் உடற்பயிற்சி செய்ய அதிகளவு புரோட்டின் பவுடர் மற்றும் அசைவ உணவு உட்கொண்ட வாலிபர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
05:57 PM (IST) May 07
ஆபரேஷன் காவேரி நடவடிக்கையின் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹக்கி பிக்கி பழங்குடியினருடன் பிரதமர் மோடி உரையாடினார்.
05:31 PM (IST) May 07
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC CMS 2023) 1261 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
05:10 PM (IST) May 07
நீட் தேர்வுக்கு பயந்து புதுச்சேரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
04:06 PM (IST) May 07
குடத்திற்குள் தலை மாட்டிய ஆட்டை ஆடுகள் காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
03:39 PM (IST) May 07
காங்கிரஸ் கர்நாடகாவுக்கு இறையாண்மையை விரும்புகிறது என்று சோனியா காந்தி கூறியதற்கு பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
01:39 PM (IST) May 07
கோயம்புத்தூரில் உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து இந்த Happy Street நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் படிக்க
01:21 PM (IST) May 07
திமுக 2 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் விதமாக #2YrsOfDravidianModel என்கிற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகிறது. மேலும் படிக்க
12:39 PM (IST) May 07
இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்று இப்படத்திற்கான காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் படிக்க
11:32 AM (IST) May 07
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் பொறுபேற்றது. திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. வெற்றிகரமாக 3-வது ஆண்டில் காலெடுத்து வைக்கும் திமுக அரசிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஸ்டாலின் தலைமையிலான 2 ஆண்டு ஆட்சியை கொண்டாடும் வகையில் தற்போது சிறப்பு பாடல் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
10:50 AM (IST) May 07
அதிமுக ஆட்சியில் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்கி வெளியிட்டதை போல் கேரளா ஸ்டோரி படத்திற்கு திமுக அரசு செய்ய வேண்டும் என எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார். மேலும் படிக்க
09:24 AM (IST) May 07
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண வந்த ஓபிஎஸ், சபரீசன் உடன் சந்திப்பு மேற்கொண்டதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
08:25 AM (IST) May 07
நடிகர் அஜித் நடிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
07:41 AM (IST) May 07
நீட் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தனித்தனியாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் யூஜி (NEET UG) தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.