இந்த நம்பர்ல இருந்து போன் வந்தா.? வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
இந்திய வாட்ஸ்அப் பயனர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர் நிபுணர்கள்.
வாட்ஸ்அப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மோசடி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் (WhatsApp) என்பது நம்மில் பலரும் பயன்படுத்தும் முக்கிய ஆப் ஆகும். உலகளவில் பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப்பில் அவ்வப்போதும் சில பிரச்சனைகள் வருகிறது. அதனை சரி செய்தாலும், சில தொழில்நுட்ப பிரச்சனைகள் வருவது இயல்பு ஆகும்.
இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் வரும் புதிய மோசடி குறித்து தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. புகாரின்படி, மக்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாகவும், இந்த அழைப்புகள் எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிலிருந்து வருகிறது என்றும் கூறுகிறார்கள்.
இருப்பினும், இந்த அழைப்புகள் வேறு நாட்டுக் குறியீட்டிலிருந்து வந்தாலும் அது உண்மையில் அந்த நாடு கிடையாது. வாட்ஸ்அப் அழைப்புகளுக்கான சர்வதேச எண்களை விற்பனை செய்யும் ஏஜென்சிகள் பணியில் உள்ளன. எனவே, செல்லுலார் அழைப்பின் போது ஏற்படும் சர்வதேச அழைப்புக் கட்டணங்களைப் பற்றி யாரும் கவலைப்படாமல் அத்தகைய எண்களில் இருந்து அழைக்கலாம்.
ட்விட்டரில் உள்ள பல பயனர்கள் சர்வதேச எண்களில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட முறை அழைப்புகளைப் பெற்றதாகக் கூறியுள்ளனர். எனவே நீங்கள் உங்களுக்கு தெரியாத எந்த சர்வதேச அழைப்புகளுக்கும் பதிலளிக்காமல் இருப்பதே சிறந்த வழி ஆகும். இந்த அழைப்புகள் பொதுவாக நீல நிறத்தில் தோன்றும்.
எனவே, திடீரென்று ஒரு சர்வதேச எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், அதை நிராகரித்து விடுவது நல்லது. உங்களின் தனிப்பட்ட விவரங்களைப் பெறுவது முதல் உங்கள் பணத்தைத் திருடுவது வரை, இந்த மோசடி செய்பவர்கள் பல மோசடி குற்றங்களுக்கு இது வழிவகுக்கலாம். மற்றொரு வகை மோசடி, வாட்ஸ்அப் செய்திகள் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெறுவதாகும்.
மோசடி செய்பவர்கள் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாகக் காட்டிக் கொண்டு, பகுதி நேர வேலையை உங்களுக்கு வழங்க முடியும் என்று கூறுகிறார்கள். இவர்கள் அனைவரும் பயனாளர்களிடையே பணத்தை பெற்று மோசடி செய்கிறார்கள். எனவே வாடிக்கையாளர்கள் உஷாராக இருப்பது அவசியம் ஆகும்.
இதையும் படிங்க..ரூ.15000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ