கர்நாடகா தேர்தல் 2023: காங்கிரஸ் வளர்ச்சி பேனாவிலும், பேப்பரிலும் மட்டுமே இருக்கு - பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸின் 1 மில்லியன் வேலை வாய்ப்புகளைக் குறிப்பிட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

Karnataka election 2023: PM Modi attacks Congress in Karnataka

வரும் 10ம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மே13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் நிறைவு பெற உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  

Karnataka election 2023: PM Modi attacks Congress in Karnataka

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா,  காங்கிரஸ் தரப்பில்  ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி என பெரும் பட்டாளமே பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, முழு கர்நாடகத்தையும் தனது கட்சி நேர்மையாக வளர்த்து, அதன் பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்ல உழைக்கும் என்று உறுதியளிக்க விரும்புவதாக கூறினார்.

காங்கிரசை சேர்ந்தவர்களை ஒருவர் பின் ஒருவராக தாக்கி பேசினார் பிரதமர் மோடி. காங்கிரஸின் அனைத்து வாக்குறுதிகளின் அடிப்படையும் பொய்யானது என்றும் கூறினார். கர்நாடக மக்களுக்கான அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். காங்கிரஸின் கொள்கைகளுடன் ஒப்பிடுகையில், பெண்கள் அதிகாரம் மற்றும் விவசாயிகள் மேம்பாடு ஆகியவற்றில் பாஜகவின் பணிகளையும் மோடி கூறினார்.

Karnataka election 2023: PM Modi attacks Congress in Karnataka

மாநிலத்தில் காங்கிரஸ் ஒருபோதும் வளர்ச்சியடையவில்லை என்று மோடி கூறினார். காங்கிரஸ் எப்போதும் பொய்யான வாக்குறுதிகளையே அளித்து வருகிறது. இந்த மாநிலத்தில் விவசாயிகளின் வளர்ச்சிக்காக பாஜக நிறைய செய்துள்ளது. இன்று காங்கிரஸின் அனைத்து பொய்களும் அம்பலமாகிவிட்டன.

இது முடிவல்ல, காங்கிரஸின் 1 மில்லியன் வேலை வாய்ப்புகளைக் குறிப்பிட்டு, இந்தக் கட்சியைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு கர்நாடக மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். அடுத்த ஐந்தாண்டுகளில் தனியார் துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு இரண்டு லட்சம் வேலைகள். இது அப்பட்டமான பொய்” என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார்.

இதையும் படிங்க..ரூ.15000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

இதையும் படிங்க..குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம்.. மனித கடத்தல், விபச்சாரத்துக்கு தள்ளப்படும் கொடுமை - என்சிஆர்பி தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios