கர்நாடக தேர்தல் 2023 : சோனியா காந்தி பேசிய பேச்சு! ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வச்சு செய்யும் பாஜகவினர்.!!
காங்கிரஸ் கர்நாடகாவுக்கு இறையாண்மையை விரும்புகிறது என்று சோனியா காந்தி கூறியதற்கு பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
கர்நாடகாவில் வரும் 10 ஆம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் பேரணியை நேற்று சனிக்கிழமை நடத்தினார்.
2019 டிசம்பரில் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காந்தி பேசியதற்குப் பிறகு, சனிக்கிழமை ஹுப்ளியில் சோனியா காந்தியின் பேரணி அவரது முதல் பேரணியாகும். காங்கிரஸ் தலைவரும், அவரது மகனுமான ராகுல் காந்தி தலைமையில் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ள பாரத் ஜோடோ யாத்திரையை காந்தி குறிப்பிட்டு, அது பாஜகவை கலக்கம் அடையச் செய்ததாகக் கூறினார்.
“பாரத் ஜோடோ யாத்ரா வெறுப்பை பரப்பும் ஒரே ஒரு காரியத்தைச் செய்யும் மக்களுக்கு எதிராக செய்யப்பட்டது. அப்படிப்பட்டவர்களால் கர்நாடகாவில் எந்த வளர்ச்சியையும் கொண்டு வர முடியாது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான தற்போதைய பாஜக, ஜனநாயகத்தின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லை என்றும், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
“ஜனநாயகக் கொள்கைகள் தங்கள் பாக்கெட்டுகளில் இருப்பதாக அவர்கள் (பாஜக) நினைக்கிறார்கள். ஜனநாயகம் இப்படி செயல்படுகிறதா ? என்று கேள்வி எழுப்பினார். பாஜக அரசின் கொள்ளை, பொய், ஆணவம், வெறுப்பு போன்றவற்றால் உருவாக்கப்பட்ட சூழலை அகற்றாமல், கர்நாடகாவும் முன்னேறவும் முடியாது, நாடு முன்னேறவும் முடியாது. தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால், கர்நாடகாவுக்கு பிரதமர் மோடியின் ஆசி கிடைக்காது என்பது போன்ற மிரட்டல்களை இவர்கள் வெளிப்படையாகவே விடுகின்றனர்.
கர்நாடக மக்கள் அவ்வளவு கோழைகள் மற்றும் பேராசை கொண்டவர்கள் அல்ல, ஆனால் அவர்களின் கடின உழைப்பை நம்புகிறார்கள் என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். கர்நாடகாவின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த காங்கிரஸ் யாரையும் அனுமதிக்காது” என்று பேசினார் சோனியா காந்தி.
இதையும் படிங்க..சார்லஸ் முடிசூட்டு விழாவில் பைபிள் படித்த இந்து.. கோஹினூர் வைரம் என்னாச்சு!! இதை கவனிச்சீங்களா?
சோனியா காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவினர் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், சமீபத்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆதாயங்களுக்காக எஸ்.டி.பி.ஐ (SDPI) போன்ற கட்சிகளுக்கு கிளையை விரிவுபடுத்துகிறது. தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததற்காக மத்திய ஏஜென்சிகள் சோதனை நடத்திய கட்சியுடன் சேர்ந்து காங்கிரஸ் இறையாண்மை பேசுகிறது.
தயவு செய்து உங்களை கேலி செய்து கொள்வதை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், கர்நாடகா எப்போது புதிய நாடாக உருவானது. பாரத் ஜோடோ யாத்திரை (#BharatTodoYatra) எல்லாம் இந்த பாரத மாதாவை துண்டு துண்டாக உடைப்பதா ? என்றும், இப்படிப்பட்ட காங்கிரஸ் இறையாண்மை பற்றி பேசுவதா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க..காப்பி சர்ச்சையில் சிக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ பாடல்! என்னடா இது ஏ.ஆர் ரஹ்மானுக்கு வந்த சோதனை