சார்லஸ் முடிசூட்டு விழாவில் பைபிள் படித்த இந்து.. கோஹினூர் வைரம் என்னாச்சு!! இதை கவனிச்சீங்களா?
லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸடர் அபே தேவாலயத்தில் நடந்த பிரமாண்ட விழாவில், சார்லஸ்க்கு முடிசூட்டப்பட்டது.
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணை ஏறினார்.
ஆனால் அவரது அதிகாரபூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது. மன்னர் 3ம் சார்லசின் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. தேவாலயத்தின் பேராயர் செயிண்ட் எட்வர்ட் கிரீடத்தை மன்னருக்கு சூட்டினார். பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து தேவாலயம் வரை மன்னர் சார்லஸ்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
மன்னர் முடிசூட்டும் விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். முடிசூட்டு விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பைபிள் வாசித்தார். பிரிட்டன் மன்னரின் முடிசூட்டும் விழாவில் இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவர் பைபிள் வாசிப்பது இதுவே முதல்முறை. என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாகும்.
அதேபோல செயின்ட் எட்வர்டின் கிரீடம் 22 காரட் தங்கத்தால் ஆனது. 360 ஆண்டுகள் பழமையான. ஒரு அடிக்கு மேல் உயரமும் 2.23 கிலோ எடையும் கொண்டது.பிரிட்டன் நாட்டின் ராணியாக மூடிசூட்டப்பட உள்ள கமிலா கோஹினூர் வைரம் கொண்ட கிரீடத்தை அணியவில்லை என ஏற்கனவே அறவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக அவர் ராணி மேரி கிரீடத்தை அணிவார்.
உலகிலேயே அதிக மதிப்புமிக்க வைரங்களுள் ஒன்று கோஹினூர் வைரம். இது இந்தியாவிற்கு சொந்தமானது. ஆனால் இங்கு இல்லை. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு எலிசபெத் ராணியின் கிரீடத்தில் இந்த வைரம் இருக்கிறது.இந்த வைரத்தை இந்தியாவிற்கு திரும்ப கேட்டு இந்திய அரசு பல முறை முயன்றுள்ளது. ஆனாலும் கிடைக்கவில்லை. இப்போதாவது கிடைக்குமா ? என்பதே இந்தியர்களின் கேள்வியாக இருக்கிறது.
இதையும் படிங்க..காப்பி சர்ச்சையில் சிக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ பாடல்! என்னடா இது ஏ.ஆர் ரஹ்மானுக்கு வந்த சோதனை