Asianet Tamil News Highlights |அமைச்சர் செந்தில்பாலாஜியை முடக்க வேண்டும் என்பதற்காகவே வருமான வரி சோதனை நடைபெறுகிறது. வருமான வரி சோதனை பற்றி கவலையில்லை. பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியலையே இது காட்டுகிறது. காவல்துறைக்கு தெரிவிக்காமல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு ஆர்.எஸ்.பாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

04:44 PM (IST) May 26
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
04:19 PM (IST) May 26
ஆருத்ரா மோசடி வழக்கில் அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.
03:50 PM (IST) May 26
வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியது, சட்டம் ஒழுங்கு தோல்வி என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
03:49 PM (IST) May 26
ஆட்சி, அதிகாரம் மாற்றத்தை குறிக்கும் வகையில் இந்த செங்கோல் அப்போதைய திருவாடுவடுதுறை ஆதினம் தம்பிரான் சுவாமிகள் தங்க செங்கோலை நேருவிடம் வழங்கினார் என்று கூறப்படுகிறது.
02:04 PM (IST) May 26
தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடு தொடர்பான செய்திகளை திசை திருப்பவே வருமானவரித்துறை சோதனை என ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
01:20 PM (IST) May 26
சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான விடுப்பு பணத்திற்கான வரி விலக்கு வரம்பு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
01:11 PM (IST) May 26
மெட்டா நிறுவனம் தனது இறுதிக்கட்ட பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
01:09 PM (IST) May 26
1998-ம் ஆண்டு பீகாரில் உள்ள முசாஹஹர் கிராமத்தில் பிறந்த அமர்ஜீட் தனது முதல் கொலையை 2006 இல் செய்தார்.
12:42 PM (IST) May 26
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
12:09 PM (IST) May 26
கேரளாவில் உள்ள பாலக்காட்டில் டிராலி பேக்கில் கேரள ஓட்டல் உரிமையாளரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11:35 AM (IST) May 26
உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான வாட்ஸ்அப் பல்வேறு அப்டேட்டுகளை வரிசையாக வெளியிட்டு வருகிறது.
10:29 AM (IST) May 26
டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
10:13 AM (IST) May 26
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துகிற வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
10:13 AM (IST) May 26
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் கார்த்தியேன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
09:58 AM (IST) May 26
நீண்ட நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காண்போம்.
09:27 AM (IST) May 26
சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஜூன் 5 வரை மட்டுமே வெயில் கொளுத்தும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
08:50 AM (IST) May 26
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. தளபதி 68 ஹீரோயின்
08:46 AM (IST) May 26
XBB என்ற கோவிட் வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. கிட்டத்தட்ட வாரந்தோறும் 65 மில்லியன் நபர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
08:27 AM (IST) May 26
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
08:26 AM (IST) May 26
கூடலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற திருடனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
08:07 AM (IST) May 26
அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடாமல், திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் என்று குற்றஞ்சாட்டி உள்ளார் அண்ணாமலை.
07:58 AM (IST) May 26
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
07:00 AM (IST) May 26
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில் திடீரென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவிக்கிறார்.