MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?

சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?

XBB என்ற கோவிட் வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. கிட்டத்தட்ட  வாரந்தோறும் 65 மில்லியன் நபர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : May 26 2023, 08:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் பரவிய இந்த வைரஸ் அடுத்தடுத்த வாரங்களில் உலகநாடுகளில் எல்லாம் வியாபித்தது. காட்டுத்தீ போல பரவிய இந்த வைரஸ் பெருந்தொற்றை கடுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கின. பொது முடக்கம் ஆகியவற்றை அமல்படுத்தி தொற்று பரவலின் வேகத்தை ஓரளவு உலக நாடுகள் கட்டுப்படுத்தினாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

வைரஸ் பரவலால் பொருளாதார அளவிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு தடுப்பூசிகள் வந்த பிறகே தொற்று பரவலின் தீவிரம் குறைந்தது. தற்போது வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் பெரும்பாலும் கட்டுக்குள் வந்து விட்டது. மக்களும் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டனர். உலக சுகாதார அமைப்பும் கொரோனா அவசர நிலை அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்றும் உலக சுகாதர அமைப்பு எச்சரித்து இருந்தது.

35

இந்த நிலையில், சீனாவில் மீண்டும் வைரஸ் தொற்று அதிகமாகியுள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஓமிக்ரான் மாறுபாடு XBB கோவிட் தொற்று அதிகரிப்பை சீனா கண்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள், நாடு ஒரு வாரத்தில் 40 மில்லியன் நோய்த்தொற்றுகளை தாண்டும். ஜூன் இறுதிக்குள் வாரந்தோறும் 65 மில்லியனாக இருக்கும் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகிறது. முந்தைய அலையில், சீனா ஒரு நாளில் 37 மில்லியன் கொரோனா வைரஸ் கேஸ்களை பதிவு செய்திருந்தது.

45

தற்போது சீனாவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மருந்து பற்றாக்குறையானது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது என்றும், போதுமான வசதிகள் பல இடங்களில் உள்ளது என்றும், தகவல் வெளியாகி உள்ளது. XBB என்பது Omicron இன் BA.2.75 மற்றும் BJ.1 துணை வகைகளின் கலப்பினமாகும். XBB மாறுபாடு BA.2.75 ஐ விட வளர்ச்சி மற்றும் நோயெதிர்ப்புத் தவிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

55

சீனா புதிய கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராகி வருகிறது. சீனாவில் புதிய கோவிட் தடுப்பூசிகள் உள்ளன. இது XBB வகைகளை தடுக்கும். தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை குறிப்பிட்டு உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரத்தில் அவசரகால கட்டம் முடிந்தாலும், தொற்றுநோய் முடிவுக்கு வரவில்லை என்று கூறியதை முக்கியமாக பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Dubai Gold Road: உலகிலேயே முதல்முறையாக தங்கத்தால் ஒரு ரோடு.. நாமும் நடக்கலாம், எங்கே தெரியுமா?
Recommended image2
Baby With Thick Mustache: பிறந்த குழந்தைக்கு அடர்த்தியான மீசையா? இணையத்தை கலக்கும் ஈக்வடார் வீடியோ
Recommended image3
Vietjet 11 Flight Offer: ரூ.11-ல் விமான டிக்கெட்! மாலத்தீவுக்கு புதிய வழித்தடம் தொடங்கும் தேதி அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved