MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • US Midterm Results: பல் இழந்த பாம்பாக மாறிய டிரம்ப்.. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி.. இனி என்ன நடக்கும்?

US Midterm Results: பல் இழந்த பாம்பாக மாறிய டிரம்ப்.. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி.. இனி என்ன நடக்கும்?

US Midterm Results: அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி படுதோல்வியை தழுவியது அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இனி டிரம்ப் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய முடியாது? என விரிவாக பார்க்கலாம்.

3 Min read
Author : Rayar A
Published : Nov 05 2026, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குடியரசு கட்சி படுதோல்வி
Image Credit : AI

குடியரசு கட்சி படுதோல்வி

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளான செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது. செனட் சபையில் பெரும்பான்மைக்கு அதிகமான 54 இடங்களையும், பிரதிநிதிகள் சபையில் 230க்கும் அதிகமான இடங்களிலும் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் ஆளும் கட்சியான டிரம்பின் குடியரசு கட்சி செனட் சபையில் 44 இடங்களிலும், பிரதிநிதிகள் சபையில் 160 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

இந்த அபார வெற்றியின் மூலம் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது டிரம்புக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரால் இனிமேல் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆதரவு இல்லாமல் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவில் எந்த ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றாலும் அல்லது வரிகளை மாற்ற வேண்டும் என்றாலும், அது செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பல் இழந்த பாம்பாக மாறிய டிரம்ப்
Image Credit : X

பல் இழந்த பாம்பாக மாறிய டிரம்ப்

அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கொள்கை சார்ந்த புதிய திட்டங்கள் அல்லது புதிய சட்டங்களை கொண்டு வரும்போது இனிமேல் ஜனநாயக கட்சி மனது வைத்தால் மட்டுமே அவற்றை நிறைவேற்ற முடியும். டிரம்ப் கொண்டு வரும் புதிய திட்டங்கள், சட்டங்கள் ஜனநாயக கட்சிக்கு பிடிக்கவில்லை என்றால் அவற்றை நிராகரிக்கவோ அல்லது அவற்றை தடுத்து நிறுத்தவோ முடியும். இதன்மூலம் அதிபர் டிரம்ப் பல் இழந்த பாம்பாக மாறி விட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏனெனில் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றதால், அமெரிக்காவின் புதிய சட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு மீது ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாடே இனி முதன்மையாக இருக்கும். மேலும் அதிபர் டிரம்பின் தன்னிச்சையான முடிவுகள், குடியேற்றக் கொள்கைகள் மற்றும் நிதிப் பயன்பாடுகள் குறித்து நாடாளுமன்ற குழுக்கள் மூலம் விசாரணை நடத்தும் அதிகாரம் எதிர்க்கட்சிக்கு கிடைத்துள்ளது.

35
அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி
Image Credit : X

அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி

நாடாளுமன்ற இடைத்தேர்தலில் டிரம்பின் கட்சி படுதோல்வி அடைந்தது அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் டிரம்ப் கொண்டுவந்த பல தன்னிச்சையான முடிவுகள் அமெரிக்காவில் வேலைபார்க்கும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினரையும் வணிகத் துறையையும் கடுமையாக பாதித்தன. அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டினருக்கான H-1B விசாக்களுக்கு $100,000 கட்டண நிபந்தனை என பல்வேறு கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டு வந்தார். இது அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களை குறிப்பாக இந்திய ஐடி ஊழியர்களை கடுமையாக பாதித்தது.

மேலும் கிரீன் கார்டு மற்றும் பிற குடியேற்ற முறைகளை மிகவும் கடினமாக்கியது இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை அதிகமாக பாதித்தது. இதேபோல் சர்வதேச வர்த்தகத்தில் தன்னிச்சையான வரிகளை விதித்தது என டிரம்பின் ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இனிமேல் டிரம்ப் நிர்வாகம் மேலும் கடுமையான விசா சட்டங்களை நாடாளுமன்றம் மூலம் சட்டமாக்க நினைத்தால், அதை ஜனநாயகக் கட்சி முடக்கிவிடும். இது H-1B விசாவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களுக்கு மிகப் பெரிய நிம்மதியையும் பாதுகாப்பையும் அளிக்கும்.

45
இஷ்டத்துக்கு புதிய சட்டம் இயற்ற முடியாது
Image Credit : X

இஷ்டத்துக்கு புதிய சட்டம் இயற்ற முடியாது

இதுமட்டுமின்றி ரஷ்யாவுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவை கண்டு எரிச்சலைடைந்த டிரம்ப், இந்திய பொருட்கள் மீது கண்மூடித்தனமாக வரிகள் விதித்தார். டிரம்ப்பின் பிடிவாதத்தால் இந்தியா, அமெரிக்க இடையேயான வர்த்த ஒப்பந்தம் தள்ளிக் கொண்டே வந்தது. இனிமேல் டிரம்ப் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாததால் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம், கல்வி மற்றும் தொழில்நுட்ப உறவுகளில் தன்னிச்சையான தடைகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, சுமூகமான சூழல் நிலவ வழிவகுக்கும்.

இனி டிரம்ப் தனது விருப்பம்போல் புதிய சட்டங்களை நிறைவேற்றவோ, கடுமையான விசா சட்டங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறவோ முடியாது. செனட் சபையின் ஆதரவு இல்லாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்லது அரசு உயர் அதிகாரிகளை தன்னிச்சையாக டிரம்ப் அரசு நியமிக்க முடியாது. அதே வேளையில் 'வீட்டோ' மூலம் ஜனநாயகக் கட்சி கொண்டுவரும் சட்ட முன்வரைவுகளை நிராகரிக்கும் அதிகாரம் டிரம்ப்பிடம் உள்ளது. ஒருவேளை டிரம்ப் நிர்வாக உத்தரவுகள் மூலம் கெடுபிடிகள் செய்ய முயன்றாலும், நாடாளுமன்ற விசாரணைகள் மற்றும் நீதிமன்ற சவால்கள் மூலம் ஜனநாயகக் கட்சி அதற்கு முட்டுக்கட்டை போட அதிக வாய்ப்புகள் உள்ளன.

55
டிரம்ப்பிடம் இருக்கும் அதிகாரம் என்ன?
Image Credit : Asianet News

டிரம்ப்பிடம் இருக்கும் அதிகாரம் என்ன?

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லாத சில துறை சார்ந்த உத்தரவுகளை டிரம்ப் அரசால் பிறப்பிக்க முடியும். அமெரிக்க ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக வெளியுறவுக் கொள்கைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்ந்து அவரின் கைவசதே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
US Election: அமெரிக்க தேர்தலில் கெத்து காட்டிய 27 வயது இந்திய பெண்.. யார் இந்த நபீலா சையத்?
Recommended image2
US Midterm Election Results: டிரம்ப் கணக்கை தவிடுபொடியாக்கிய அமெரிக்க மக்கள்.! இடைக்காலத் தேர்தலில் நடந்தது என்ன?
Recommended image3
உனக்கு நாங்க இருக்கோம் ராசா... ஆதரவற்ற இளைஞரின் திருமண அழைப்பை ஏற்று படையெடுத்து வந்த 10 ஆயிரம் பேர் - சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்
Related Stories
Recommended image1
ஈரானை நரகத்திற்கு விரட்டுவேன்: கொக்கரித்த டிரம்ப்... 'பகவந்த் கேசரி' சீனை போட்டு கலாய்த்த ஈரான்!
Recommended image2
US Midterm Election Results: டிரம்ப் கணக்கை தவிடுபொடியாக்கிய அமெரிக்க மக்கள்.! இடைக்காலத் தேர்தலில் நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved