MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • ஈரானை நரகத்திற்கு விரட்டுவேன்: கொக்கரித்த டிரம்ப்... 'பகவந்த் கேசரி' சீனை போட்டு கலாய்த்த ஈரான்!

ஈரானை நரகத்திற்கு விரட்டுவேன்: கொக்கரித்த டிரம்ப்... 'பகவந்த் கேசரி' சீனை போட்டு கலாய்த்த ஈரான்!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை வரைபடத்திலிருந்தே அழித்து நரகத்திற்கு விரட்டுவேன் என எச்சரித்ததற்கு, ஈரான் தூதரகம் விசித்திரமான முறையில் பதிலடி கொடுத்துள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 25 2026, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டிரம்பின் மிரட்டலுக்கு ‘பாலையா’ ஸ்டைலில் பதிலடி!
Image Credit : x

டிரம்பின் மிரட்டலுக்கு ‘பாலையா’ ஸ்டைலில் பதிலடி!

சர்வதேச அரங்கில் அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு உலகம் அறிந்ததுதான். ஐ.நா மேடைகள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை இரு நாட்டுத் தலைவர்களும் வார்த்தைப் போரில் மல்லுக்கட்டுவது வழக்கமான ஒன்று. ஆனால், அமெரிக்காவின் அதிபர் விடுத்த கடுமையான ராணுவ அச்சுறுத்தலுக்கு, தென்னிந்தியத் திரைப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சியைக் கொண்டு ஈரான் பதிலடி கொடுத்துள்ள விசித்திரமான சம்பவம் தற்போது இணைய உலகையே அதிர வைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஐ.நா சபையில் சீறிய டிரம்ப்: பாலையா ஸ்டைலில் ஈரான் நோஸ்கட்
Image Credit : x

ஐ.நா சபையில் சீறிய டிரம்ப்: பாலையா ஸ்டைலில் ஈரான் நோஸ்கட்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். ஈரானை உலக வரைபடத்திலிருந்தே முற்றிலும் அழித்து, அவர்களை நரகத்திற்கு விரட்டுவேன் என்று டிரம்ப் ஆக்ரோஷமாக முழங்கினார்.

அவரது இந்த ஆவேசப் பேச்சை எதிர்கொள்ள விரும்பாத ஈரானிய தூதுக்குழுவினர், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் கூட்டத்தைப் புறக்கணித்து உடனடியாக வெளிநடப்பு செய்தனர். மேலும் பேசிய டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த பிறகு ஈரானுடன் ஒரு புதிய உடன்படிக்கை எட்டப்படலாம் என்றும், இல்லையேல் ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

34
‘பகவந்த் கேசரி’ பட வீடியோவுடன் ஈரான் கொடுத்த மாஸ் பதிலடி!
Image Credit : x

‘பகவந்த் கேசரி’ பட வீடியோவுடன் ஈரான் கொடுத்த மாஸ் பதிலடி!

அமெரிக்க அதிபர் விடுத்த மிரட்டலுக்கு, ஈரான் அரசு மிகவும் விசித்திரமான அதேநேரம் சற்றும் எதிர்பாராத ஒரு வழியில் பதிலடி தந்துள்ளது. ஜிம்பாப்வேயில் உள்ள ஈரானிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் 58 வினாடிகள் ஓடக்கூடிய ஆக்சன் வீடியோ கிளிப் ஒன்றைப் பகிர்ந்தது. அது வேறு எதுவும் அல்ல; தெலுங்குத் திரையுலகின் முன்னணி சூப்பர் ஸ்டாரான நந்தமுரி பாலகிருஷ்ணா (பாலையா) நடிப்பில் 2023-ல் வெளியான 'பகவந்த் கேசரி' திரைப்படத்தின் வெறித்தனமான சண்டைக் காட்சி.

அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான அந்தக் காட்சியில், எதிரிகள் தன்னை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடும்போது, நடிகர் பாலகிருஷ்ணா சாலையில் உள்ள ஒரு பெரிய மேன்ஹோல் மூடியைத் தூக்கிக் கேடயமாகப் பயன்படுத்தித் தோட்டாக்களைத் தடுத்துத் தற்காத்துக் கொள்வார். பின்னர், அங்கிருக்கும் ராட்சத கேஸ் சிலிண்டர்களைக் கொண்டு எதிரிகளைத் துவம்சம் செய்யத் தயாராவார்.

இந்த மாஸ் வீடியோவைப் பகிர்ந்துள்ள ஈரான் தூதரகம், ஈரான் ஒன்றும் தற்காப்பற்ற நாடு அல்ல என்பதை டிரம்ப் அறிவார். அவர்கள் சமீபகாலமாக ஹாலிவுட் படங்களுக்குப் பதிலாக பாலிவுட் மற்றும் இந்தியத் திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று டிரம்பைக் கிண்டல் செய்யும் விதமாகப் பதிவிட்டுள்ளது. உலக வல்லரசுக்கு எதிரான தற்காப்பைக் குறிக்கும் குறியீடாக தென்னிந்தியத் திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சியை ஈரான் பயன்படுத்தியது சர்வதேச நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது.

44
ஒருபக்கம் கலாய்... மறுபக்கம் ரகசியப் பேச்சுவார்த்தை!
Image Credit : x

ஒருபக்கம் கலாய்... மறுபக்கம் ரகசியப் பேச்சுவார்த்தை!

டிரம்பின் இந்த மிரட்டல் பேச்சு வெறும் உள்நாட்டுத் தேர்தல் பிரச்சாரத்திற்கான சுய விளம்பரம் மட்டுமே என்று கூறி ஈரானிய ராணுவ அதிகாரிகள் இதனை அடியோடு நிராகரித்துள்ளனர்.சமூக வலைத்தளங்களில் இத்தகைய வார்த்தைப் போரும் கேலிப் பதிவுகளும் ஒருபுறம் அனல் பறந்தாலும், மறுபுறம் நியூயார்க்கில் 2 நாடுகளுக்கும் இடையேயான தூதரக பேச்சுவார்த்தைகள் ரகசியமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கத்தார் நாட்டின் மத்தியஸ்தம் மூலம், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் சுமார் 3 மணி நேரம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையான 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) பகுதியில் பதற்றத்தைத் தணிப்பது குறித்தும், சர்வதேச அளவில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிப்பது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உலகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா வருகை: விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்ற டொனால்ட் டிரம்ப்!
Recommended image2
Sea Cucumber: பெயர் வெள்ளரி..ஆனால் இது காய்கறி இல்லங்க..கடலுக்குள் வாழும் வித்தியாசமான உயிரினம்!
Recommended image3
Petrol Diesel Price: நிஜமாவே, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 குறையப்போகுதா?! காரணம் தெரியுமா?!
Related Stories
Recommended image1
Petrol Diesel Price: நிஜமாவே, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 குறையப்போகுதா?! காரணம் தெரியுமா?!
Recommended image2
Thailand Travel Rules: தாய்லாந்து போறீங்களா.? இந்தியர்களுக்கு புதிய விதிகள்.. இந்த ஆவணங்கள் ரொம்ப முக்கியம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved