Asianet News TamilAsianet News Tamil

மெட்டாவின் சமீபத்திய பணிநீக்கம்.. இந்தியாவின் 2 முக்கிய நிர்வாகிகளும் வேலை இழந்ததால் அதிர்ச்சி..

மெட்டா நிறுவனம் தனது இறுதிக்கட்ட பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

Metas recent dismissal. Who are India's main executives who lost their jobs?
Author
First Published May 26, 2023, 11:45 AM IST

உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் கடந்த ஆண்டு முதலே ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அமேசான், மெட்டா, ட்விட்டர், கூகுள் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மைக்ரோசாப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இதையும் படிங்க : புதிய பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் கோரி ராகுல்காந்தி மனு.. பாஜக எதிர்ப்பது ஏன்?

அந்த வகையில் மெட்டா நிறுவனம் தனது இறுதிக்கட்ட பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது மார்ச் மாதம் 10,000 பேரை பணியில் இருந்து நீக்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும். சந்தைப்படுத்தல், தளப் பாதுகாப்பு, நிறுவனப் பொறியியல், நிரல் மேலாண்மை, உள்ளடக்க உத்தி மற்றும் கார்ப்பரேட் தகவல்தொடர்புகள் போன்ற குழுக்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் இரண்டு முக்கிய நிர்வாகிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மார்க்கெட்டிங் இயக்குனர் அவினாஷ் பந்த் மற்றும் இயக்குனர் மற்றும் மீடியா பார்ட்னர்ஷிப்களின் தலைவரான சாகேத் ஜா சௌரப் ஆகியோர் பணியில் விடுவிக்கப்பட்டனர்.

மெட்டா நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில், 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களளை பணியில் இருந்து நீக்கியது. இதையடுத்து 2-ம் சுற்று பணிநீக்கங்களை அறிவித்த முதல் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா ஆனது. 2020 ஆம் ஆண்டிலிருந்து தனது பணியாளர்களை இரட்டிப்பாக்கிய பணியமர்த்தலைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டில் இருந்து அந்நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை மெட்டா நிறுவனம் குறைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க : காரணம் இல்லாமல் வாழ்க்கை துணையுடன் உடலுறவு கொள்ள மறுப்பது மனக் கொடுமைக்கு சமம்: உயர்நீதிமன்றம்

Follow Us:
Download App:
  • android
  • ios