காரணம் இல்லாமல் வாழ்க்கை துணையுடன் உடலுறவு கொள்ள மறுப்பது மனக் கொடுமைக்கு சமம்: உயர்நீதிமன்றம்
காரணம் இல்லாமல் நீண்ட காலமாக வாழ்க்கை துணையுடன் உடலுறவு கொள்ள மறுப்பது மனக் கொடுமைக்கு சமம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தனக்கு விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து குடும்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, நபர் ஒருவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. இந்த தம்பதி 1979 இல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
1994 ஆம் ஆண்டில், தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ. 22,000 கொடுத்ததால், பஞ்சாயத்துக்கு முன் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்தனர். பின்னர் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த நபர் விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தை நாடினார். இருப்பினும், ஆதாரங்களை ஆய்வு செய்த பின்னர், குடும்ப நீதிமன்றம் அவரின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையும் படிங்க : இரவு நேரங்களில் காம வெறி பிடித்து அலைத்த வாலிபர்! 30 பெண் குழந்தைகளை கொன்ற வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
இதை தொடர்ந்து அந்த நபர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார். அப்போது தனது மனைவி திருமண வாழ்க்கைக்கான தனது கடமையை நிறைவேற்ற மறுத்துவிட்டார் என்று அந்த நபர் கூறினார். மேலும், தன்னுடன் உடல் உறவை ஏற்படுத்திக் கொள்ள தனது மனைவி மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து அவருக்கு விவாகரத்து ஆணையை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த கணவருக்கு விவாகரத்து ஆணையை வழங்கிய நீதிபதிகள், "சந்தேகத்திற்கு இடமின்றி, போதுமான காரணமின்றி, ஒரு மனைவி தனது துணையுடன் நீண்ட காலமாக உடலுறவு கொள்ள அனுமதிக்காதது மனக் கொடுமையாகும். மனைவியுடன் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அந்த நபருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் ஏதும் இல்லாததால், அவர்களை இணைந்து வாழ சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.” என்று தெரிவித்தனர்.
மேலும், நீண்ட காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதும், திருமண பந்தத்தில் கணவருக்கு எந்த மரியாதையும் இல்லை என்பதும், திருமணப் பொறுப்புக் கடமையை நிறைவேற்ற மனைவி மறுத்ததும் பதிவு மூலம் தெளிவாகத் தெரிகிறது. எனவே இந்த தம்பதியின் திருமணம் முற்றிலும் முறிந்துவிட்டது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதையும் படிங்க : புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் நான் கலந்துக்கொள்கிறேன்… அறிவித்தார் முன்னாள் பிரதமர் தேவகவுடா!!