Asianet News TamilAsianet News Tamil

இரவு நேரங்களில் காம வெறி பிடித்து அலைத்த வாலிபர்! 30 பெண் குழந்தைகளை கொன்ற வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

6 வருடங்களாக 30க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த ரவீந்தர் குமாருக்கு 8 ஆண்டுகளுக்குப் பின் ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.

Serial killer who walked 40 km in search of kids, raped & killed over 30 children sentenced to life
Author
First Published May 25, 2023, 4:50 PM IST

பல பெண் குழந்தைகளைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை குற்றவாளி ரவீந்தர் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. குற்றவாளி 2008 முதல் 2015 வரை 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி கொலை செய்தாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் 2008 முதல் 2015 வரை தான் குற்றச் செயல்களில் ஈடுபட்டதை ரவீந்தர் ஒப்புக்கொண்டார். ஆறு ஆண்டுகளாக நடந்த கொடூரமான குற்றங்கள் தொடர்பாக, எட்டு ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு, சனிக்கிழமையன்று அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

ரவீந்தர் டெல்லியில் கூலி வேலை செய்து வந்தார். அவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி, ஆபாசப் படங்களைப் பார்த்து, குழந்தைகளைத் தேடிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவர்களைக் கொன்றுவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 2008ஆம் ஆண்டில், இந்த கொடூரமான வழக்கத்தை ஆரம்பித்தபோது அவருக்கு 18 வயதுதான். அடுத்த ஏழு ஆண்டுகளில், அவர் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கிறார்.

பொதுத் தேர்வுகளில் அசத்திய 1,500 பள்ளி மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்!

Serial killer who walked 40 km in search of kids, raped & killed over 30 children sentenced to life

2008ஆம் ஆண்டு, ரவீந்தர் உத்தரபிரதேசத்தின் கஸ்கஞ்சில் இருந்து வேலை தேடி டெல்லிக்கு வந்தார். அவரது தந்தை ஒரு பிளம்பராக பணிபுரிந்தார், அவரது தாயார் பல வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்தார். டெல்லிக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, ரவீந்தர் போதைப்பொருளுக்கு அடிமையாகி, வீடியோ கேசட்டில் ஆபாசப் படம் பார்க்கத் தொடங்கினார். நாளடைவில் அதுவே அவரது வழக்கமானது.

ரவீந்தர் நாள் முழுவதும் கூலி வேலை செய்துவிட்டு மாலையில் குடிபோதையில் இருப்பார் என போலீசார் தெரிவிக்கின்றனர். இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை சேரியில் உள்ள தனது அறையில் தூங்கிவிட்டு, இரவில் குழந்தைகளைத் தேடிச் செல்வார். ரவீந்தர் சில சமயங்களில் கட்டுமானத் தளங்கள் மற்றும் சேரிகளைச் சுற்றி 40 கிலோமீட்டர்கள் வரை நடந்து சென்று தன் வெறிக்கு இரையான பெண்களைத் தேடி இருக்கிறார்.

குழந்தைகளைக் கவரும் வகையில் 10 ரூபாய் நோட்டு, சாக்லேட் போன்றவற்றைக் கொடுத்து அவர்களை  தனி இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிடுவார். இவரால் 6 முதல் 12 வயது கொண்ட குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என போலீசார் கூறுகின்றனர்.

ஒரே ஒரு ஒயின் பாட்டிலை ஏலத்தில் விற்று கோடீஸ்வரரான மார்க் பால்சன்!

Serial killer who walked 40 km in search of kids, raped & killed over 30 children sentenced to life

2008ஆம் ஆண்டு, டெல்லியின் கராலா பகுதியில் இருந்து ஒரு சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். போலீசாரிடம் சிக்காமல் தப்பி வந்ததால், தைரியம் அடைந்த ரவீந்தர் தொடர்ந்து பல குழந்தைகளைச் சூறையாடி இருக்கிறார். பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தன்னை காவல்துறையினரிடம் அடையாளம் காட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் அவர்களைக் கொன்றிருக்கிறார். பிடிபடாமல் இருப்பதற்காக ஒரே இடத்தில் இரண்டாவது முறை குற்றத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

2015ஆம் ஆண்டில், டெல்லியின் புறநகர் பகுதி டிசிபியாக இருந்த விக்ரம்ஜீத் சிங்கிடம் பிடிபட்ட பிறகு ரவீந்தர் தனது குற்றங்கள் குறித்த பற்றி வாக்குமூலம் அளித்தார். அவர் தனது ஒவ்வொரு குற்றங்களைப் பற்றியும் விரிவாகக் கூறினார். குற்றங்களில் ஈடுபட்டகுறைந்தது 15 இடங்களுக்கு காவல்துறையினர் அவருடன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

சாம்பாரில் விஷம் கலந்து கொடுத்து மாமனார், மாமியார் கொலை! ஒரு வருடத்திற்கு பின் சிக்கியது எப்படி?பரபரப்பு தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios