உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பாதை தெளிவாகியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் தவறு இல்லை. கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தரப்பு தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள். கட்சி முடிவு செய்த நிபந்தனைகளை நீதிமன்றம் சட்டவிரோதம் என கூற முடியாது. 5 ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்பதவிகள் இருந்தன.52 ஆண்டுகால அதிமுகவில் 47 ஆண்டுகள் பொதுச்செயலாளர் பதவிதான் இருந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டுள்ளது.

03:14 PM (IST) Mar 22
காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, இருட்டில் மருத்துவர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
02:01 PM (IST) Mar 22
தென்காசி மாவட்டத்தில் பாதிரியார் ஸ்டான்லி குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் கிளம்ப காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
01:21 PM (IST) Mar 22
இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த இளைஞன் செய்த பகீர் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
01:03 PM (IST) Mar 22
ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3 ஆம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3, 2023 தலைவர் கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
12:57 PM (IST) Mar 22
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்துக்கு சென்றனர்.
12:57 PM (IST) Mar 22
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12:15 PM (IST) Mar 22
தமிழக அரசின் இ சேவை மையம் தொடங்கி எவ்வாறு சம்பாதிப்பது என்பதை பற்றி இங்கு காண்போம்.
12:00 PM (IST) Mar 22
உலகில் 111 நாடுகளில் சாவுத்தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. 24 நாடுகளில் அது நடைமுறையில் இல்லை. உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த இந்தியா சாவுத்தண்டனை ஒழிப்பில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
11:21 AM (IST) Mar 22
செயற்கை நுண்ணறிவான AIயால் பலரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பலருக்கும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
11:13 AM (IST) Mar 22
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக துணைபொதுச்செயலாளர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10:31 AM (IST) Mar 22
2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற தொடங்கியது. இது நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
10:16 AM (IST) Mar 22
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லையென ஆளுநர் ஆர்என் ரவி கூறியிருந்த நிலையில், மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.
09:12 AM (IST) Mar 22
உகாதி தினமான இன்று பல்வேறு பல்வேறு பண்டிகைகள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்ச் 22 ஆன இன்று வங்கிகளுக்கு பல்வேறு மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
09:11 AM (IST) Mar 22
மகளை காதல் திருமணம் செய்த மருமகனை பெண் வீட்டார் நடுரோட்டில் ஆட்டை வெட்டுவது போல் வெட்டி ஆணவக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:42 AM (IST) Mar 22
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.
08:38 AM (IST) Mar 22
ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து திருடுபோன நகைகளை ஈஸ்வரி என்பவர் திருடியதை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் படிக்க
08:15 AM (IST) Mar 22
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
08:15 AM (IST) Mar 22
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு பரபரப்பு தீர்ப்பை விதித்துள்ளது சென்னை போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்றம்.
08:10 AM (IST) Mar 22
நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளரும், இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான கோ.பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
07:21 AM (IST) Mar 22
பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோளிலில் 6.8 பதிவாகியுள்ளது. இதனால், கட்டிடங்கள் விழுந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.