Asianet News TamilAsianet News Tamil

Viral : திடீர் நிலநடுக்கம்.. இருட்டில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - காஷ்மீரில் நடந்த சம்பவம்

காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, இருட்டில் மருத்துவர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Doctors deliver baby amid strong tremors in Kashmir's Anantnag
Author
First Published Mar 22, 2023, 3:11 PM IST

ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவில் 6.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அதனை சுற்றிய பல நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்தியாவிலும் பல மாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி, உத்தர பிரதேச மாநிலம் வசுந்தரா, காசியாபாத், காஷ்மீர் என பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Doctors deliver baby amid strong tremors in Kashmir's Anantnag

இதையும் படிங்க..இ சேவை மையம் தொடங்கி ஈசியா சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா? முழு விபரம் உள்ளே !!

காஷ்மீரில் அனந்த்நாக் பகுதியில் நிலநடுக்கத்தின் போது மருத்துவர்கள் பிரசவம் பர்த்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. காஸ்மீரில் உள்ள, அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாராவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அப்போது அறுவைசிகிச்சை அறையில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு உதவியாளர்கள் இருந்தனர்.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் அங்கிருந்த மருத்துவர்கள் பதறாமல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அது சமூக அவளைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..பாலியல் தொல்லை: வசமாக சிக்கிய அடுத்த பாதிரியார்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்

Follow Us:
Download App:
  • android
  • ios