பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டிடம்.. அலறிய பொதுமக்கள்.. 11 பேர் பலி.. பலர் காயம்..!
கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அதிகாலையில் துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோளிலில் 6.8 பதிவாகியுள்ளது. இதனால், கட்டிடங்கள் விழுந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அதிகாலையில் துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க;- Explained: இந்தியாவில் வட மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது ஏன்?
இந்நிலையில், நேற்று இரவு ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைபகுதியை மையமாக வைத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 6.6 பதிவாகி இருந்தது. இதன் தொடர்ச்சியாக கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, இந்தியா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதையும் படிங்க;- #Breaking: டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவு!!
இந்நிலையில், பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியிருந்தது. இதனால், பீதி அடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால், பல இடங்களில் உள்ள கட்டங்களில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும், ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்ட இந்த நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.