#Breaking: டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவு!!

Strong Earthquake in Delhi and  Across Northern India டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

earthquake in Jammu Kashmir and Delhi

டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்தியா மட்டுமின்றி துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இதை செய்தால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும்... வியூகத்தை கூறிய பிரசாந்த் கிஷோர்!!

ஆப்கானிஸ்தானின் கலாஃப்கானில் இருந்து 90 கிமீ தொலைவில் இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் தெருக்களில் மக்கள் கூடியிருப்பதைக் காட்டுகின்றன. மேலும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் பொருட்கள் விழுந்ததாகவும் கூறுகின்றனர். பல்வேறு பகுதிகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சத்தில் பதற்றதோடு எழுந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

இதையும் படிங்க: கால் முறிந்தும் ஆம்புலென்சில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி

சிறிது நேரம் நில அதிர்வு உணரப்பட்டதால் ஏராளமானோர் குடியிருப்பு கட்டிடங்களில் உள்ள திறந்தவெளிக்கு வந்தனர். தற்போது வரை உயிரிழப்புகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து படங்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் மொபைல் சேவைகளில் இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios