இதை செய்தால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும்... வியூகத்தை கூறிய பிரசாந்த் கிஷோர்!!

பாஜகவை தோற்கடிக்க சித்தாந்தத்தின் அடிப்படையில் கூட்டணியை உருவாக்க வேண்டும் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 

alliance should be formed on the basis of ideology to defeat the bjp says prashant kishore

பாஜகவை தோற்கடிக்க சித்தாந்தத்தின் அடிப்படையில் கூட்டணியை உருவாக்க வேண்டும் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பலன் அளிக்காது. ஏனெனில் அது நிலையற்றதாகவும், கருத்தியல் வேறுபட்டதாகவும் உள்ளது. பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால், அதன் பலத்தை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: குஜராத்தில் 7 விநாடியில் தடைமட்டமான பிரம்மாண்ட குளிரூட்டும் கோபுரம்!

இந்துத்துவா, தேசியவாதம், நலன்புரிதல் ஆகிய மூன்று பில்லரில், இரண்டு நிலைகளையாவது தாண்ட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை வீழ்த்த முடியாது. இந்துத்துவா சித்தாந்தத்தை எதிர்த்துப் போராட சித்தாந்தங்களின் கூட்டணி இருக்க வேண்டும். காந்தியவாதிகள், அம்பேத்கரியர்கள், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் ஆகியோரின் சித்தாந்த கூட்டணி வேண்டும்.

இதையும் படிங்க: கால் முறிந்தும் ஆம்புலென்சில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி

அதேநேரம் சித்தாந்தத்தின் அடிப்படையில் குருட்டு நம்பிக்கையுடன் இருக்க முடியாது. ஊடகங்களில் எதிர்க்கட்சிகள் அல்லது தலைவர்கள் ஒன்றிணைவதை பார்க்க முடிகிறது. அவர்களில் யார் யாருடன் மதிய உணவு சாப்பிடுகிறார்கள், யாரை டீக்கு அழைக்கிறார்கள் என்பதை பார்க்கிறோம். சித்தாந்தத்தின் அடிப்படையில் கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். வேறு எந்த வழியும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios