குஜராத்தில் 7 விநாடியில் தடைமட்டமான பிரம்மாண்ட குளிரூட்டும் கோபுரம்!
1993ஆம் ஆண்டு கட்டப்பட்ட 85 மீட்டர் உயரமான குளிரூட்டும் கோபுரம் சுமார் 72 மீட்டர் விட்டம் கொண்டது. இது வெறும் 7 விநாடிகளில் இடிந்து விழுந்து தடைமட்டமானது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள உத்ரான் மின் நிலையத்தில் 30 ஆண்டுகள் பழமையான குளிரூட்டும் கோபுரம் உள்ளது. இந்தக் குளிரூட்டும் கோபுரம் இன்று (செவ்வாய்க்கிழமை) கட்டுப்படுத்தப்பட்ட வெடிகுண்டு மூலம் இடித்துத் தகர்க்கப்பட்டது. 85 மீட்டர் உயரமான இந்த கோபுரம் வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டால் ஆனது. சுமார் 72 மீட்டர் விட்டம் கொண்டது.
இந்த கோபுரம் இன்று காலை 11.10 மணி அளவில் இடிக்கப்பட்டது. இடிக்க மொத்தம் 220 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கோபுரம் ஏழே வினாடிகளில் தடைமட்டமானது. இடிபாடுகள் கீழே விழுந்து, பெரும் தூசி மண்டலத்தை எழுப்பியது. சில நொடிகளில் கோபுரம் தரைமட்டமாக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் பலத்த சத்தம் கேட்டது.
தபி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் கோபுரத்திலிருந்து 250-300 மீட்டர் தொலைவில் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் அமைக்கப்பட்டன.
குஜராத்தில் 7 விநாடியில் தடைமட்டமான பிரம்மாண்ட குளிரூட்டும் கோபுரம்!
அதிகாரிகள் நிபுணர்கள் உதவியுடன் தூண்களை துளையிட்டு வெடிபொருட்களை அமைத்தனர். இந்த கோபுரம் 135 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1993ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோபுரம் குஜராத் மாநில மின்சாரக் கழகத்தால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தொழில்நுட்ப-வணிகக் காரணங்களுக்காக கோபுரத்தை இடிப்பது அவசியமானது. இதற்கான மத்திய மின்சார ஆணையத்தின் அனுமதியும் 2017 இல் பெற்றப்பட்டது. செப்டம்பர் 2021 முதல் குளிரூட்டும் கோபுரத்தை இடிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கின. கொதிகலன், ஜெனரேட்டர், டர்பைன் மற்றும் மின்மாற்றி ஆகியவை முதலில் அகற்றப்பட்டன. இந்த கோபுரம் உள்ள எரிவாயு மின் நிலையத்தில் 375 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு அலகு இயங்கிவருகிறது.