BREAKING: கொரோனாவில் இருந்து குணமடைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்.. ஆனால் ஐசியூவில் இருப்பார்..!
கடந்த 15ம் தேதி திடீரென நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுகவை 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதனையடுத்து, எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க;- சிங்கப்பூரில் இருந்து அப்பல்லோவுக்கு ஷிப்ட் செய்யப்பட்ட கனிமொழியின் கணவர்.. ஓடோடி சென்று பார்த்த முதல்வர்.!
இந்நிலையில், கடந்த 15ம் தேதி திடீரென நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இதையும் படிங்க;- BREAKING: கொரோனாவில் இருந்து குணமடைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்.. ஆனால் ஐசியூவில் இருப்பார்..!
இந்நிலையில், கொரோனாவில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீண்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இருதய பாதிப்பு காரணமாக ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.