6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு நீதிமன்றம் அளித்த அதிர்ச்சி தண்டனை

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு பரபரப்பு தீர்ப்பை விதித்துள்ளது சென்னை போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்றம்.

20 years in prison for raping a 6-year-old girl

சென்னை, அண்ணா நகரை அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயதான குமார், அதேபகுதியில் உள்ள 6 வயது சிறுமியிடம், தன் வீட்டு மாடியில் பூனைகள் இருப்பதாக கூறி, மாடிக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை தெரிந்துகொண்ட தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவான வழக்கில் குமார் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க..ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

20 years in prison for raping a 6-year-old girl

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி. ஜி. கவிதா ஆஜராகி வாதிட்டார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், அபராத தொகையை சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..TN Budget 2023 : ‘கொங்கு மண்டலம்’ டார்கெட்! தமிழக அரசின் பட்ஜெட்டும் திமுக Vs அதிமுக மோதலும் - பின்னணி என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios