நான் ரெடி.!! சவாலுக்கு எடப்பாடி தயாரா.? கோர்ட்டில் ஓபிஎஸ் போட்ட கண்டிஷன் - மறுபடியும் முதல்ல இருந்தா
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்துக்கு சென்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, சனிக்கிழமை இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது.
இந்நிலையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேர் சார்பிலும் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.
கடந்த மார்ச் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவசர வழக்காக நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். இதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என்றும், முடிவை அறிவிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கை முன்கூட்டியே (மார்ச் 22) ஆம் தேதி விசாரித்து பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் மார்ச் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், அதிமுகவின் இரட்டை தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது என்றும், பெரும்பான்மை உள்ளது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு கட்சி நிறுவனர் எம்ஜிஆர் நோக்கத்திற்கு விரோதமானது. ஜனநாயகத்தின் முக்கிய கட்டமைப்பு அரசியல் கட்சி. உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனக் கூறுவதற்கு, அரசியல் கட்சிகள் சங்கங்களோ, கிளப்களோ அல்ல என்று வாதிட்டனர்.
இதையும் படிங்க..இ சேவை மையம் தொடங்கி ஈசியா சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா? முழு விபரம் உள்ளே !!
தொடர்ந்த ஓபிஎஸ் தரப்பினர், கட்சியில் எந்த விதிகள் திருத்தப்பட்டாலும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு, அங்கீகாரம் பெற வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறும் எதிர் தரப்பினர், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக நினைத்த அனைத்தையும் செய்து விட முடியாது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.பொதுச்செயலாளர் பதவிக்காக ஈபிஎஸ்-க்கு ஆதரவாக விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாத வகையில் நிபந்தனைகளை விதித்து விதிகளை திருத்தியுள்ளனர். நிபந்தனைகளை நீக்கினால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார்.
பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதற்கு முன் கட்சியினரிடம் கருத்து கேட்கப்படவில்லை. கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை வாபஸ் பெற தயார் என ஓபிஎஸ் தரப்பு வாதத்தை தற்போது முன்வைத்துள்ளது.
இதையும் படிங்க..பொதுமக்கள் கவனத்திற்கு.! உகாதியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை - முழு விபரம் இதோ
இதையும் படிங்க..சாட் ஜிபிடியால் வேலை இழப்பு அபாயம் ஏற்படுமா.? பதறும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்திய நிறுவனம்