TNPSC குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வரா நீங்கள்.. குட் நியூஸ் சொன்ன டிஎன்பிஎஸ்சி - முழு விபரம்

அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.

TNPSC announced Increase in Group 4 Vacancies

7,301 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவுகள் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு வெளியாகலாம் என்று தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாத கடைசியில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

TNPSC announced Increase in Group 4 Vacancies

ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆள்சேர்க்கை அறிவிப்பில் 7,301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், நியமனம் செய்யப்பட வேண்டிய குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 9,801 ஆக உயர்த்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருவதாக கடந்த ஜனவரி மாதம்  செய்திகள் கசிந்தது. ஆனால் அதுகுறித்த செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

குரூப் 4 தேர்வர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியிடப்பட உள்ளன. இந்த நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொண்டு எழுதினர். 

தற்போது காலிப்பணியிடங்கள் மேலும் கிட்டத்தட்ட 3000 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு 10,117 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்பு அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios