பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு 22ம் தேதி விசாரிக்கப்பட்டு 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என நீதிபதி கூறியுள்ளார்.

03:18 PM (IST) Mar 19
தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி கோவை ஆலந்துறை பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
03:00 PM (IST) Mar 19
சக்கரத்தாறை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளேன். சக்கரம் சுழன்று கொண்டு தான் உள்ளது அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும் என்று கூறியுள்ளார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
02:44 PM (IST) Mar 19
சிற்ப கலைக்கூடத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
01:42 PM (IST) Mar 19
தமிழக கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறை அத்துமீறல் குறித்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
01:11 PM (IST) Mar 19
பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு 22ம் தேதி விசாரிக்கப்பட்டு 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என நீதிபதி கூறியுள்ளார்.
12:48 PM (IST) Mar 19
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கும், இராம்சர் ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12:32 PM (IST) Mar 19
ஏசியாநெட் நியூஸ் தொடர்பான வழக்கில் செய்தியாளர்களை கிரிமினல் குற்றங்களுக்காக சிறையில் அடைக்க முடியாது என்று கோழிக்கோடு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
11:57 AM (IST) Mar 19
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 18வது எபிசோட்.
11:54 AM (IST) Mar 19
ஓபிஎஸ்க்கு 1.50 கோடி உறுப்பினர்களில் ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. ஓபிஎஸ் நேரடியாக வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை. அடிப்படை உறுப்பினர்கள் அனைவருமே ஒற்றை தலைமைதான் வேண்டும் என வலியுறுத்தினர்.
10:51 AM (IST) Mar 19
நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
10:35 AM (IST) Mar 19
டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
09:11 AM (IST) Mar 19
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் தவணை தவறிய கடன் தொகைக்கான இ.எம்.ஐ வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
09:07 AM (IST) Mar 19
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் போதை தலைக்கேறிய நிலையில் 3 பெண்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:42 AM (IST) Mar 19
எல்லையற்ற சேவையை சார்ந்த நாடு தான் கைலாசா என்று நித்தியானந்தா தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
08:08 AM (IST) Mar 19
பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், அதன் இறுதியில் அப்படத்தின் டிரைலரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு. அனல் பறக்கும் அரசியல் வசனங்களும், அதகளமான ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்துள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று உள்ளது. டிரைலர் இதோ
07:54 AM (IST) Mar 19
டெல்லியில் பெண் கொல்லப்பட்டு பின்னர் பல துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
07:18 AM (IST) Mar 19
ஓ.பன்னீசெல்வம் - சசிகலா- டிடிவி.தினகரன் அரசியல் ரீதியான சந்திப்பு ஏன் இன்னும் நடைபெறவில்லை என்ற ரகசியத்தை அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டுடைத்துள்ளார்.
07:17 AM (IST) Mar 19
திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் சம்ப இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.