கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் தொகைக்கான அபராத வட்டி தள்ளுபடி - முழு விபரம் இதோ

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் தவணை தவறிய கடன் தொகைக்கான இ.எம்.ஐ வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Penalty Interest Waiver on Loan Amount in Co-operative Housing Societies - Full details here

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்று தவணை கடந்த உறுப்பினர்களுக்கு தவணை தவறிய தொகைக்கான இ.எம்.ஐ வட்டி, அபராத வட்டி தள்ளுபடி சலுகை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டல துணைபதிவாளர் (வீட்டுவசதி) இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்று தவணை தவறிய கடன்தாரர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தின் கீழ் கடன்தாரர்கள் செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டி முழுவதும் செலுத்தும் பட்சத்தில் அவர்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

Penalty Interest Waiver on Loan Amount in Co-operative Housing Societies - Full details here

அதற்கான சலுகை காலம் 3. 3. 2023ல் இருந்து 6 மாதங்களுக்கு அதாவது 2. 9. 2023 வரை மட்டும் அமலில் இருக்கும். அதன் பிறகு இத்திட்டம் செயல்பாட்டில் இருக்காது என்று அரசு அறிவித்துள்ளது. எனவே, தவணை தவறிய அனைத்து உறுப்பினர்களும் இச்சலுகையை தவறாமல் பயன்படுத்தி அசல் மற்றும் வட்டியினை மட்டும் செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இச்சலுகை தொடர்பாக விவரங்களுக்கு தொடர்புடைய கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios