கருமம் கருமம்.! ரோட்ல பொட்ட பொண்ணுங்க செய்யுற வேலையா இது.. சென்னையில் இரவில் நடந்த அதிர்ச்சி.! வைரல் போட்டோ.!
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் போதை தலைக்கேறிய நிலையில் 3 பெண்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் 3 பெண்கள் மதுபோதையில் சாலையில் செல்பவர்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது சென்னை மாநகர பேருந்தை வழிமறித்து அதற்கு அடியில் படுத்துக் கொண்டு மூன்று பெண்கள் ரகளை செய்து கொண்டிருந்தனர்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் பேருந்தில் அடியில் புகுந்த மூன்று பேரையும் பத்திரமாக பெண் போலீசார் வெளியே கொண்டு வந்தனர். ரகளையில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் போதை தலைக்கேறிய நிலையில் 3 பெண்களும் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மீண்டும் ரகளை ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து பெண் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அந்த மூன்று பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். போதை தெளியவைத்து விசாரணை நடத்தியதில் 3 பேரும் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் என்றும், அவர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் உணவு பரிமாறுவதற்காக வேலைக்கு வந்தததாகவும், வேலை முடிந்த கையோடு மூக்கு முட்ட குடித்து விட்டு போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, சாலையில் மது அருந்தி ரகளையில் ஈடுபட்ட 3 பெண்கள் மீதும் திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.