Published : Jul 22, 2022, 07:20 AM ISTUpdated : Jul 22, 2022, 09:22 PM IST

Tamil News live : 5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூரரைப் போற்று !

சுருக்கம்

தற்போது 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் திரைப்படங்களின் விபரம் இதோ சிறந்த பின்னணி இசை - சூரரை போற்று (GV பிரகாஷ்) ,சிறந்த ஸ்கிரீன் பிளே - சூரரை போற்று,சிறந்த வசனம் - மண்டேலா,சிறந்த துணை நடிகை - அபர்ணா பாலமுரளி,சிறந்த நடிகர் - சூர்யா, சிறந்த படம் - சூரரை போற்று பெற்றுள்ளது.

Tamil News live :  5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூரரைப் போற்று !

09:22 PM (IST) Jul 22

விஜய் சேதுபதி புறக்கணித்த 800..நாயகனாக களமிறங்கிய முத்தையா முரளிதரன் !

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தன் வாழ்வில் பட்ட இன்னல்களையும் அதன் மூலம் பெற்ற வெற்றிகளும் குறித்தான 800 படத்தில் அவரே நாயகனாக நடிக்கிறார் என்கிற சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க...விஜய் சேதுபதி புறக்கணித்த 800..நாயகனாக களமிறங்கிய முத்தையா முரளிதரன் !

09:02 PM (IST) Jul 22

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த 10 தேசிய விருதுகள்!

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த 10 தேசிய விருதுகள்!

08:02 PM (IST) Jul 22

Arulnithi dejavu movie review : த்ரில்லரில் விளையாடும் அருள்நிதி.. பிரபலங்கள் பாராட்டும் ‘தேஜாவு !

Arulnithi dejavu movie review : இதில் முதல் பாதி விறுவிறுப்பாக நடைபெற்றதாக கூறும் ரசிகர்கள் மறு பாதியில் சற்று சுவாரஸ்யம் குறைந்துள்ளதாக கூறியுள்ளனர். இருப்பினும் படம் மாறுபட்ட கதைக்களத்துடன் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படிக்க...Arulnithi dejavu movie review : த்ரில்லரில் விளையாடும் அருள்நிதி.. பிரபலங்கள் பாராட்டும் ‘தேஜாவு !

07:36 PM (IST) Jul 22

ச்ச மிஸ் ஆகிடுச்சே... தேசிய விருது கிடைக்கும்னு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த தமிழ் படங்கள்

இந்த வருட தேசிய விருதை வென்றெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மூன்று படங்கள் ஏமாற்றத்தை பெற்றுள்ளன. அந்த வரிசையில் முதலீடை பிடித்துள்ளது க/பெ ரண சிங்கம்.

மேலும் படிக்க... ச்ச மிஸ் ஆகிடுச்சே... தேசிய விருது கிடைக்கும்னு எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த தமிழ் படங்கள்

06:20 PM (IST) Jul 22

சூர்யாவைப் போல் அக்‌ஷய் குமாருக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு

சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது. அவர் இவ்விருதை பெறுவது இதுவே முதன்முறை ஆகும். இது தவிர மேலும் ஒரு நடிகருக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் தான். டனாஜி தி அன்சங் வாரியர் என்கிற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் படிக்க

05:19 PM (IST) Jul 22

சிறந்த திரைக்கதைக்கான 68 - வது தேசிய விருதை தட்டி சென்ற மண்டேலா!

இந்த படம். திரையரங்குகளுக்கு வராமல் இது நேரடியாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் மூலம் கடந்த ஏப்ரல் நான்காம் தேதி வெளியானது.

மேலும் படிக்க... சிறந்த திரைக்கதைக்கான 68 - வது தேசிய விருதை தட்டி சென்ற மண்டேலா!

05:11 PM (IST) Jul 22

யோகிபாபுவின் மண்டேலாவுக்கு 2 தேசிய விருது

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்த மண்டேலா படம் சிறந்த திரைக்கதை மற்றும் டயலாக் ஆகியவற்றிற்காக 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது. இந்த இரண்டு விருதுகளையும் மடோன் அஸ்வின் தான் வென்றுள்ள

05:09 PM (IST) Jul 22

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு 3 தேசிய விருது

வஸந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறந்த படத்தொகுப்புக்காக இப்படத்தில் பணியாற்றிய ஸ்ரீகர் பிரசாத்துக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது லட்சுமி பிரியாவுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர சிறந்த் தமிழ் படமாகவும் இது தேர்வு செய்யப்பட்டு உள்ளது

05:06 PM (IST) Jul 22

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு 5 தேசிய விருது

சூரரைப் போற்று படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. அதன்படி சிறந்த நடிகருக்கான தேசியவிருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கொங்கராவுக்கும், சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர சிறந்த படத்துக்கான விருதையும் சூரரைப்போற்று தட்டித்தூக்கி உள்ளது.மேலும் படிக்க

05:05 PM (IST) Jul 22

முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் சூர்யா

சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடி-யில் வெளியிடப்பட்ட சூரரைப் போற்று திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சூர்யா தேசிய விருதை வெல்வது இதுவே முதன்முறை ஆகும்.மேலும் படிக்க

04:36 PM (IST) Jul 22

சிறந்த தமிழ் படம் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'

68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி சிறந்த படங்களுக்கான விருது தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் தேர்வு. வஸந்த் இப்படத்தை இயக்கினார்.

04:13 PM (IST) Jul 22

68th National Film Awards Live : நேரலையில் 68வது தேசிய திரைப்பட விருதுகள்..லிங்க் இதோ!

68th National Film Awards Live 2022 : இன்று நடைபெற்று வரும்  68வது தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது.  லிங்க் இதோ!

மேலும் படிக்க...68th National Film Awards Live : நேரலையில் 68வது தேசிய திரைப்பட விருதுகள்..லிங்க் இதோ!

04:04 PM (IST) Jul 22

கல்லணையை காப்பாற்றியவர் இவர் தான்.. ஆனால் தமிழக அரசு அங்கீகரிக்கவில்லை.. கோரிக்கை விடுத்த அன்புமணி

தமிழ்நாட்டின் நலன்களுக்காக ஆர்தர் தாமஸ் காட்டன் செய்த பணிகளின் பட்டியல் மிக நீளமானது. ஆனால், ஆர்தர் காட்டனின் சாதனைகளை நாம் அங்கீகரிக்கவில்லை என்பது மிகவும் வேதனையானது. எனவே அவரது பிறந்தநாளான மே 15-ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடுவதுடன், அதை நீர் மேலாண்மை நாளாகவும் அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அண்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
 

03:19 PM (IST) Jul 22

மக்களே உஷார்!! இன்று மிக கனமழை .. 23 மாவட்டங்களில் கனமழை அலர்ட்.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று  நீலகிரி, கோவை மாவட்டங்களில்‌ கன முதல்‌ மிக கன மழையும்‌ திருப்பூர், தேனி உள்ளிட்ட 23 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

02:33 PM (IST) Jul 22

வருவாய்த்துறை அமைச்சருக்கு கொரோனா

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி; தொற்று உறுதியான நிலையில் அமைச்சர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார்
 

02:08 PM (IST) Jul 22

1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 6 முதல் 10-ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
 

01:39 PM (IST) Jul 22

படிக்கிற பசங்க ஒன்னு சேர்ந்து.. என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டானுங்க.. கதறிய தாய்

திருவள்ளூரில் 10-ம் வகுப்பு மாணவியை உடன் படிக்கும் சக மாணவர்கள் ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க

01:35 PM (IST) Jul 22

கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட  ரமணா(28) எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

01:19 PM (IST) Jul 22

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்...!கெடு விதித்த நீதிமன்றம்..! ஶ்ரீமதி உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்த பெற்றோர்..

கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் உடலை நாளை காலை 6 மணிக்கு பெற்றுக்கொள்வதாக பெற்றோர் நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க..

12:36 PM (IST) Jul 22

புதிய குடியரசு தலைவர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டார் என நம்புகிறேன்.. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.

புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டார் என நம்புவதாக புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் சாராய ஆலை ஓடுகிறது என்றும், மேலும் 6 மதுபான ஆலைகள் அமைக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் படிக்க
 

12:25 PM (IST) Jul 22

மாணவி உயிரிழப்பு தொடர்பாக போலியான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன - எஸ்.பி

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது என்று கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார். மேலும் மாணவி உயிரிழப்பு தொடர்பாக போலியான தகவல்கள் மற்றும் வதந்திகல் பரப்பப்பட்டுள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 

12:04 PM (IST) Jul 22

கள்ளக்குறிச்சி மாணவி உடல் தகனம்; ஶ்ரீமதி தந்தைக்கு நாளை காலை வரை கெடு விதித்த நீதிமன்றம்

பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள் அமைதியாக தீர்வு காண வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்

மேலும் படிக்க...

11:24 AM (IST) Jul 22

மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை .. நீதிபதி எச்சரிக்கை

நாளை காலை 11 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கில் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

11:15 AM (IST) Jul 22

தமிழகத்தில் தொடரும் ஐடி ரெய்டு..! இபிஎஸ்க்கு செக் வைக்கும் பாஜக...! மோடியிடம் சரணடைகிறாரா எடப்பாடி?-ஜெகதீஸ்வரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் வருமான வரி சோதனை மற்றும் சிபிஐ விசாரணை மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக சமூக செயற்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..
 

11:02 AM (IST) Jul 22

மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று மருத்துவர்களை கொண்ட குழு ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

10:53 AM (IST) Jul 22

சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள்.. பி.இ படிப்புகளுக்கு எப்போது வரை விண்ணப்பிக்கலாம்..? புதிய அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை அவகாசம் அளித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், உயர்கல்வித்துறை புதிய உத்தரவை வெளியிட்டுள்ளதுமேலும் படிக்க

10:29 AM (IST) Jul 22

CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி.. சென்னை முன்றாமிடம்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் சென்னை மண்டலமானது 97.79% தேர்ச்சி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.மேலும் படிக்க

10:28 AM (IST) Jul 22

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனா பொறுப்பேற்றுக் கொண்டார்

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனா தேர்வு செய்யப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

10:03 AM (IST) Jul 22

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் தற்போதுவெளியிடப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகள் cbseresults.nic.in
results.cbse.nic.in, results.gov.in, digilocker.gov.in என்கிற தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளதுமேலும் படிக்க

09:59 AM (IST) Jul 22

12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகின

12ம்  வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, results.cbse.nic.in, results.gov.in, digilocker.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துகொள்ளலாம்.

 

09:50 AM (IST) Jul 22

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதனையடுத்து, பாஜக தலைவர்களை இபிஎஸ் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

09:48 AM (IST) Jul 22

பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை திரும்ப அளித்த மக்கள்

கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை திரும்ப அளிக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து, பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை மக்கள் சாலை ஓரங்களில் வீசி செல்கின்றனர். 

09:32 AM (IST) Jul 22

கள்ளக்குறிச்சி வன்முறையால் சான்றிதழ்,கல்வியை இழந்த மாணவர்கள்..!மாற்று ஏற்பாடு என்ன.? அன்பில் மகேஷ் புதிய தகவல்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் படிப்பு பாதிக்காத வகையில் 2 கல்லூரிகள், 17 தனியார் பள்ளிகளில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

08:48 AM (IST) Jul 22

இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் செயல்படுவதற்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் வழக்கு

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் வழக்கு தொடுத்துள்ளனர். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

08:46 AM (IST) Jul 22

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும்..! ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் அண்ணாமலை

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமைச்சர்களுக்கு எதிராக சொந்த தொகுதி மக்களே போராட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..
 

08:33 AM (IST) Jul 22

லாரி மோதி இரு சக்கர வாகனம் மோதல்.. புதுக்கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற புதுக்கல்லூரி மாணவர் முகமது சதக்கத்துல்லா (18) உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

08:31 AM (IST) Jul 22

அரிசி, கோதுமை, தயிர் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து இன்று ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சென்னையில் இன்று நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக வணிகர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

08:26 AM (IST) Jul 22

உண்மை எதுவென்று தெரியாமல் உளறாதீங்க.. இது உங்க பதவிக்கு அழகு அல்ல.. இபிஎஸ்ஐ பங்கம் செய்த அமைச்சர்.!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்குப் புறம்பான செய்தியை ஆராயாமல் அதையே அறிக்கையாக விட்டிருக்கிறார் என உணவுத்துறை சக்கரபாணி விமர்சித்துள்ளார். 

மேலும் படிக்க

07:50 AM (IST) Jul 22

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

07:25 AM (IST) Jul 22

ரயில் முன் பாய்ந்த பிரபல தனியார் கல்லூரி மாணவி.. உடல் சிதறி உயிரிழந்த பரிதாபம்..

செங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க