சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்..? முழு விவரம்..
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் cbse.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளங்களில் தங்களது முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ-யின் புதிய போர்டலான parikshasangam.cbse.gov.in என்று இணையதளம் மூலமாகவும் மாணவர்கள் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். results.cbse.nic.in, results.gov.in , digilocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.
மாணவர்கள் 2021 ஆம் ஆண்டில் 99.04 சதவீதம், 2020ஆம் ஆண்டில் 91.46 சதவீதம், 2019 ஆம் ஆண்டில் 91.10 சதவீதம், 2018ஆம் ஆண்டில் 86.7 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.