Asianet News TamilAsianet News Tamil

உண்மை எதுவென்று தெரியாமல் உளறாதீங்க.. இது உங்க பதவிக்கு அழகு அல்ல.. இபிஎஸ்ஐ பங்கம் செய்த அமைச்சர்.!

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியைத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வகித்த பதவிக்கும் தற்போது வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

minister sakkarapani responded to Edappadi Palanisamy
Author
Tamil Nadu, First Published Jul 22, 2022, 8:12 AM IST

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்குப் புறம்பான செய்தியை ஆராயாமல் அதையே அறிக்கையாக விட்டிருக்கிறார் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விமர்சித்துள்ளார். 

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டிற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாளிதழ் ஒன்றில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 92.50 கோடி கிலோ அரிசி மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதைப் பார்த்த இந்திய உணவுக்கழக அதிகாரிகள் இது போன்ற அரிசியை வழங்கிய அரிசி ஆலை முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த அரிசியை மனிதப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க;- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு புகழ் எடப்பாடியாரே! நீங்க சட்டம்-ஒழுங்கு பற்றி பேசலாமா? போட்டு தாக்கிய முரசொலி

minister sakkarapani responded to Edappadi Palanisamy

துறை சம்பந்தமாக செய்தியாளர் சந்திப்பின் போது பதில் சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தேன். அதற்குள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்குப் புறம்பான செய்தியை ஆராயாமல் அதையே அறிக்கையாக விட்டிருக்கிறார். இந்திய உணவுக் கழகத்திடமிருந்து வந்த கடித நகலை உங்களுக்குத் தருகிறேன். அதில் என்ன கூறியிருக்கிறது என்பதை நீங்களே படித்துப் பாருங்கள்.

minister sakkarapani responded to Edappadi Palanisamy

கும்பகோணத்தில் 92.50 மெட்ரிக் டன், நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள் 92.50 மெட்ரிக் டன், அதாவது 92 ஆயிரத்து 500 கிலோ அரிசி. இதன் மதிப்பு சுமார் 33 இலட்சம் ரூபாய் ஆகும். இந்த அரிசியில் 5.2 % சேதமடைந்த அரிசி என்றும், 7 % பழுப்பு நிற அரிசி என்றும் சேதமடைந்த அரிசி 5 % விழுக்காடுக்கு மேல் இருக்கக் கூடாது; ஆனால் பழுப்பு நிற அரிசி 7 % இருக்கலாம் என்றும் 0.2 % கூடுதலாக சேதமடைந்து உள்ளது என்பதால் பொதுமக்களுக்கு அனுப்பக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடைகளுக்கு இந்த அரிசி அனுப்பப்படவில்லை. இதோடு இந்த அரிசியை அனுப்பிய ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க;-  அப்பாவை தொடர்ந்து மகனுக்கும் ஆப்பு ரெடி? விடாமல் அடிக்கும் இபிஎஸ்.. மிரளும் ஓபிஎஸ்.!

minister sakkarapani responded to Edappadi Palanisamy

இந்த நிலையில் பேனைப் பெரிதாக்கி பெருமாள் ஆக்கியது போல் 92,500 கிலோ என்பதை 9 இலட்சம் டன் அரிசி என்று ஒரு முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அறிக்கை விடுகிறார் என்றால் என்னவென்று சொல்வது? தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரிசி ஆலை முகவர்கள் மற்றும் கழக ஆலைகள் மூலம் அரைத்த அரிசியின் தற்போதைய இருப்பே 3 இலட்சத்து 23 ஆயிரத்து 554 டன்தான். தஞ்சாவூரில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜையாவது உண்மை நிலை என்னவென்று கேட்டிருக்கலாம் அல்லது வைத்தியலிங்கம் அவர்களையாவது கேட்டிருக்கலாம். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியைத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வகித்த பதவிக்கும் தற்போது வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-   மத்திய அரசு பதிலை ஒரு மாதமாக மறைத்தது ஏன்? தமிழக அரசை விடாமல் கிடுக்குப்பிடி கேள்வி கேட்கும் அன்புமணி.!

Follow Us:
Download App:
  • android
  • ios