CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி.. சென்னை முன்றாமிடம்
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் சென்னை மண்டலமானது 97.79% தேர்ச்சி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. மாணவர்கள் cbse.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளங்களில் தங்களது முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி results.cbse.nic.in, results.gov.in , digilocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க:சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்..? முழு விவரம்..
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 91.25% யும் மாணவிகள் 93 % தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 98. 83 % தேர்ச்சி பெற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்று 3 வது இடத்தை பெற்றுள்ளது. மாணவர்கள் 2021 ஆம் ஆண்டில் 99.04 சதவீதம், 2020ஆம் ஆண்டில் 91.46 சதவீதம், 2019 ஆம் ஆண்டில் 91.10 சதவீதம், 2018ஆம் ஆண்டில் 86.7 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.