கள்ளக்குறிச்சி வன்முறையால் சான்றிதழ்,கல்வியை இழந்த மாணவர்கள்..!மாற்று ஏற்பாடு என்ன.? அன்பில் மகேஷ் புதிய தகவல்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் படிப்பு பாதிக்காத வகையில் 2 கல்லூரிகள், 17 தனியார் பள்ளிகளில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Anbil Mahesh said that alternative arrangements have been made so that the studies of Kallakurichi school students are not affected

மாணவர்களின் படிப்பு..?

கள்ளிக்குறிச்சியில் தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த 13 ஆம்தேதி விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஶ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து தனியார் பள்ளியை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சூறையாடினார்கள். இதில் 40க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் பள்ளி அறையும் முழுவதும் சேதம் அடைந்தது. அந்த பள்ளியில் படித்து வந்த 4 ஆயிரம் மாணவர்களின் டிசியும் கிழித்து எரியப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளியில் வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மாணவி மரணம் தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள் என 5 பேரை கைது செய்துள்ளனர். தற்போது பள்ளியை சீரமைக்க 2 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது அந்த பள்ளயில் படித்த மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனையடுத்து மாற்று நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கின் போது இதெல்லாம் செய்யக்கூடாது… கடலூர் எஸ்பி போட்ட ரூல்ஸ்!!

Anbil Mahesh said that alternative arrangements have been made so that the studies of Kallakurichi school students are not affected

மாற்று ஏற்பாடு என்ன?

இந்தநிலையில் கும்பகோனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கள்ளக்குறிச்சி பள்ளி நிகழ்வுகள் தொடர்பாக முதலமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எங்களது கருத்துக்களை எடுத்துரைத்ததாக தெரிவித்தார். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களுக்கு  படிப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட கல்வி அதிகாரி தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் பள்ளியில் படித்த மாணவர்கள் நலனுக்காக இந்த பள்ளியை உடனடியாக சரி செய்து மீண்டும் வகுப்புகள் தொடங்க முடியுமா என ஆராயப்பட்டது.

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும்..! ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் அண்ணாமலை

Anbil Mahesh said that alternative arrangements have been made so that the studies of Kallakurichi school students are not affected

கல்லூரியில் பள்ளி படிப்பு

இல்லையென்றால் இந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 அரசு பள்ளிகள், 17 தனியார் பள்ளிகள், இரண்டு கல்லூரிகள் தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்தார். அங்கு 40, 40 வகுப்பறையோடு தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தயாராக உள்ளோம், அரசு என்ன சொல்கிறது என்பதற்காக காத்துக் கொண்டுள்ளதாக கூறினார். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சரின் அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அரசு உத்தரவினை மீறிய 981 தனியார் பள்ளிகள்… விளக்கம் கேட்டு நோட்டீஸ்… அன்பில் மகேஷ் தகவல்!!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios