ஜெயலலிதா அவர்களின் லட்சியப் பாதையில் எனது மக்கள் தொண்டும், கழகப் பணிகளும் தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது அறிக்கையில், எனது தாயின் மறைவு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், எல்லாம்வல்ல இறைவனின் அருளும், அனைவரின் ஆறுதல் வார்த்தைகளும் எனக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக விளங்குகின்றன. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் லட்சியப் பாதையில் எனது மக்கள் தொண்டும், கழகப் பணிகளும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

10:34 PM (IST) Feb 28
யோகா செய்யும் போது ஆற்றில் விழுந்த பெண்னின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
09:48 PM (IST) Feb 28
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திமுக அரசு அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் தலை சிறந்த ஆட்சியை தொடர்ந்து தந்து வருகிறார். தமிழர்களை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டையும் உலக அளவில் தலை நிமிர வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
09:28 PM (IST) Feb 28
திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி சிறப்பாக செயல்படுத்தியது போல், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இலவச பேருந்து பயணம், மாதாந்திர உதவி தொகை உயர்வு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது மட்டுமில்லாமல் செயல்படுத்தி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளார்.
09:17 PM (IST) Feb 28
2021ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது முதல் பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்தித்தொகுப்பு இது.
08:06 PM (IST) Feb 28
ஏர்டெல் நெட்வொர்க்கில் கடந்த மாதம் குறைந்தபட்ச ரீசார்ஜ் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வாய்ஸ்கால், டேட்டா கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
07:49 PM (IST) Feb 28
இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அந்தரங்க பகுதியில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
07:02 PM (IST) Feb 28
தாராபுரம் இன்ஸ்பெக்டர் செல்லம் நேற்று இரவு முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஆடியோ வைரலாகி வருகிறது.
06:19 PM (IST) Feb 28
மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
04:46 PM (IST) Feb 28
மார்ச் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் வங்கி எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
04:24 PM (IST) Feb 28
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
02:55 PM (IST) Feb 28
கல்வான் பள்ளத்தாக்கு நினைவிடத்திற்காக போராடும் பீகார் குடும்பத்திற்கு இந்திய ராணுவம் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளது.
12:38 PM (IST) Feb 28
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன் அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். தற்போது அதிலிருந்து அவர் விலகி, அவருக்கு பதில் அருணாச்சலம் என்பவர் அந்த பதிவுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் படிக்க
11:56 AM (IST) Feb 28
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நாயகனாக நடிக்க உள்ள ஏகே 62 படத்தில் ஹீரோயினாக நடிக்க இந்தியன் 2 பட நடிகையை லைகா நிறுவனம் சிபாரிசு செய்துள்ளதாம். மேலும் படிக்க
11:51 AM (IST) Feb 28
டெல்லியில் நடைபெற்ற தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், தற்போதைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தின் பேத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
11:51 AM (IST) Feb 28
வாணியம்பாடி அருகே அதிவேகமாக சென்ற கார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் மீது மோதியது. இதில், 3 பள்ளி மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
11:17 AM (IST) Feb 28
விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகை நயன்தாராவும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது. மேலும் படிக்க
09:25 AM (IST) Feb 28
நடிகர் விவேக் நடித்த காட்சிகளை இந்தியன் 2 படத்தில் இருந்து தூக்கும் முடிவை படக்குழு கைவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. மேலும் படிக்க
08:44 AM (IST) Feb 28
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், போரூர், கிண்டி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
08:15 AM (IST) Feb 28
மதுரை வண்டியூரைச் சேர்ந்த ரவுடி வினோத் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
07:58 AM (IST) Feb 28
குரூப் 2 தேர்வை முறையாக கையாளததால் தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தேர்வை ரத்து செய்து விட்டு புதிய தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
07:21 AM (IST) Feb 28
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளார்.
07:21 AM (IST) Feb 28
மணிப்பூரில் அதிகாலை 2.46 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 3.2 ஆகப் பதிவாகி இருந்தது. அதிகாலையில் உரக்கத்தில் இருந்த பொதுமக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததை அடுத்து அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.