Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட் இருக்கு பாருங்க

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

chennai power cut on february 28 see list of areas

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், போரூர், கிண்டி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

தாம்பரம்:

ராஜகீழ்பாக்கம் சாம்ராஜ் நகர் 1 முதல் 8வது தெரு, வாழச்சேரி மெயின் ரோடு, குருசாமி நகர், அம்பேத்கர் தெரு, முடிச்சூர் முல்லை நகர், முத்துமுருகன் நகர், மகாலட்சுமி நகர், சக்தி நகர், பம்மல் வெங்கட்ராமன் தெரு, திருவள்ளுவர் தெரு, எம்ஜிஆர் நகர், அன்னிபெசன்ட் தெரு, அண்ணாசாலை குறுக்குத் தெரு சிட்லபாக்கம் அவ்வை தெரு, காமராஜர் தெரு, 100 அடி சாலை, திருவள்ளுவர் நகர், பல்லவரம் பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகர், தர்கா சாலை, காமராஜ் நகர், ரேணுகா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

வண்ணாரப்பட்டை:

டி.எச்.சாலை, ஜி.எ. சாலை ஒரு பகுதி, பாலா அருணாச்சலம் தெரு, கப்பல் போலு தெரு ஒரு பகுதி, நாபாளையம் மணலி புதிய நகரம், விச்சூர், சிட்கோ எஸ்டேட், எழில் நகர், வெள்ளிவயல், கொண்டகரை, MRF நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

போரூர்:

திருமுடிவாக்கம் பழத்தண்டலம் கிராமம், அண்ணாநகர், பூந்தண்டலம், 11வது, 12வது & 13வது தெரு/திருமுடிவாக்கம் சிட்கோ கோவூர், குமரன் நகர், ஆறுமுகம் நகர், மேல்மா நகர், இரண்டாம் கட்டலை காவனூர் நடைபாதை, கண்ணப்பன் நகர், திருவள்ளூர் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

கிண்டி:

ஐபிசி காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், பூதப்பேடு, நெசப்பாக்கம், ஜெய்பாலாஜி நகர் & கான் நகர், எம்ஜிஆர் நகர் பகுதி, தனகோட்டி ராஜா தெரு, முனுசாமி தெரு, ராஜ்பவன், வண்டிக்காரன் தெரு ஒரு பகுதி, நேரு நகர் பகுதி, செயின்ட் தாமஸ் மவுண்ட் மகாலட்சுமி நகர் 10வது தெரு, வாணுவம்பேட்டை நங்கநல்லூர் பி.வி.நகர், மடிப்பாக்கம் எல்ஐசி நகர் முழு பகுதியும், மூவரசன்பேட்டை இந்து காலனி, புழுதிவாக்கம் சின்னமணி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios