MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கமல் விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கமல் விலகல்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Feb 28 2023, 12:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கும் கமல்ஹாசன் அரசியலின் மீதுள்ள ஆர்வத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அவர் அரசியலில் தீவிரம் காட்ட தொடங்கியதும் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதனால் அவர் சினிமாவை விட்டு விலக உள்ளதாகவும் கூறப்பட்டது. பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனை எதிர்த்து போட்டியிட்ட கமல்ஹாசன் நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார். 

34

தேர்தல் தோல்விக்கு பின் மனம்மாறிய கமல் மீண்டும் சினிமாவின் பக்கம் தனது கவனத்தை செலுத்த தொடங்கினார். அதன்பின் இவர் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. விக்ரம் படம் தந்த அதிரி புதிரியான வெற்றியால் உற்சாகமடைந்த கமல் அடுத்தடுத்து இந்தியன் 2, எச்.வினோத் படம், பா.இரஞ்சித் படம் என வரிசைகட்டி நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... இந்தியன் 2-வில் திடீர் டுவிஸ்ட்... நடிகர் விவேக்கின் காட்சிகளுக்கு உயிர்கொடுக்கும் ஷங்கர்..!

44
கமல்ஹாசன், அருணாச்சலம்

கமல்ஹாசன், அருணாச்சலம்

இவ்வாறு சினிமாவில் பிசியானாலும் தனது அரசியல் பணிகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு அவர்களுக்காக வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கமல்ஹாசன் விலகி உள்ளார். அவருக்கு பதில் அருணாச்சலம் என்பவர் அந்த பதிவுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வழக்கறிஞர் ஆ.அருணாச்சலத்தை மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்படும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் என தன் வசம் இரண்டு பதவிகள் இருந்ததால் அதில் ஒன்றை பிறருக்கு வழங்க முடிவு செய்து கமல் இந்த முடிவை எடுத்துள்ளாராம். இருப்பினும் அவர் அக்கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... இந்திய மக்களின் சராசரி வயது வெறும் 29.. ஆனால்.? எல்லாம் மாறனும்.! மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த கமல் ஹாசன்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(26.1 ov)113/6
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved