முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா மரணம் அடைந்துள்ளார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

10:30 PM (IST) Feb 19
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழ்ந்திருக்கும் 45 ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை ஆகும். - அன்புமணி ராமதாஸ் கேள்வி.
10:03 PM (IST) Feb 19
பெங்களூருவில் நடைபெற்ற தனது அண்ணன் சத்திய நாராயணனின் சதாபிஷேக விழாவில் கலந்துகொண்டார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
08:56 PM (IST) Feb 19
விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது, என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா ? என கேட்டார். - கமல்ஹாசன் பேச்சு.
07:59 PM (IST) Feb 19
திருமணத்திற்கு முன்பே குழந்தை கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், ஒரு பெண் பல திருமணங்களை செய்து கொள்ளலாம் என்றும் பழங்குடியினர் இன்றளவும் பல்வேறு சடங்குகளை செய்து வருகிறார்கள்.
06:35 PM (IST) Feb 19
சென்னையில் பாஜகவினர் போராட்டம் செய்ய உள்ளார்கள் என்று அறிவித்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
06:07 PM (IST) Feb 19
ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
04:44 PM (IST) Feb 19
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தமிழகத்தில் மின்சார வாகன ஆலையை அமைக்க உள்ளது. தமிழ்நாட்டில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது.
03:28 PM (IST) Feb 19
19 வயது பெண்ணை முத்தமிட முயன்ற நபருக்கு மும்பை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
03:14 PM (IST) Feb 19
ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசனும், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அண்ணாமலையும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும் படிக்க..
03:06 PM (IST) Feb 19
திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல்நலக்குறைவால் தஞ்சாவூரில் காலமானார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
12:45 PM (IST) Feb 19
நேற்று சிவராத்திரி பூஜையின் போது டிரம்ஸ் சிவமணி அருகே அமர்ந்திருந்த மயில்சாமி, அப்போது அவரிடம் தனது நீண்ட நாள் ஆசை என்ன என்பதையும் கூறி இருக்கிறார். மேலும் படிக்க
11:50 AM (IST) Feb 19
கட்சி விரோத செயங்களில் ஈடுபட்டதாக மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் புதிய பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
10:43 AM (IST) Feb 19
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஈரோட்டிற்கான தேர்தல் மட்டுமல்ல. இந்தியாவின் தலை எழுத்தையே மாற்றக்கூடிய தேர்தல் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
10:23 AM (IST) Feb 19
நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மயில்சாமியின் மறைவுக்கு அவருடன் சினிமாவில் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ
10:16 AM (IST) Feb 19
பல குரல்களில் நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் படைத்த மயில்சாமி, தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். 'காமெடி டைம்' நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப் பெற்றவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
09:18 AM (IST) Feb 19
நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று தான் நடித்த கிளாஸ்மேட்ஸ் என்கிற படத்துக்காக டப்பிங் பேசியபோது எடுக்கப்பட்ட கடைசி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
08:31 AM (IST) Feb 19
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கடந்த 1965-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி பிறந்தவர் மயில்சாமி. நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறுவயதில் இருந்தே மேடை நாடகங்களின் நடித்து வந்த மயில்சாமிக்கு கடந்த 1985-ம் ஆண்டு தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் படிக்க
08:15 AM (IST) Feb 19
தமிழ் சினிமாவின் முன்னனி நகைச்சுவை நடிகராக இருந்த மயில்சாமி, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடு முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் உயிர் இழந்தார்.
மேலும் படிக்க..