யார் இந்த மயில்சாமி..? நடிகராக மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டது ஏன்.?
தமிழ் சினிமாவின் முன்னனி நகைச்சுவை நடிகராக இருந்த மயில்சாமி, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடு முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் உயிர் இழந்தார்.
நடிகர் மயில்சாமி காலமானார்
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி 200க்குமே மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் ரசிகர்களை கவர்ந்திருப்பார். நடிகர் பாக்யராஜ் நடிப்பில் உருவான தாவணி கனவுகள் திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்தவர் மயில்சாமி. அந்த திரைப்படத்தை அடுத்து, பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான கன்னி ராசி திரைப்படத்தில் மளிகை பொருட்களை டெலிவரிசெய்யும் பாயாக வந்திருப்பார். இப்படி சிறிய சிறிய கதாபாத்திரங்களின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார் மயில்சாமி. பல குரல் மன்னராகவும் கலக்கியிருப்பார். நடிகர் விவேக், வடிவேலு என திரைத்துறையின் முன்னனி நகைச்சுவை நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். மயில்சாமி நடிப்பில் உருவாக தில் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிரபல தொலைக்காட்சியில் உருவான காமெடி டைம் நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களிடமும் மயில்சாமியை கொண்டு சென்றது.
திருமணம் நடந்த நேரமே சரி இல்லை? குண்டை தூக்கி போட்ட ஜோதிடர்.. துணிந்து முடிவெடுத்த நயன் - விக்கி!
அரசியலிலும் மயில்சாமி
மயில்சாமி சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக ஈடுபாடு கொண்டவர், நடிகர் மயில்சாமி. 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது மக்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கே தேடிச்சென்று உதவிகளை செய்துவந்தார். அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்த மயில்சாமி ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு எந்த ஒரு கட்சியிலும் சேராமல் அமைதியாக இருந்தார். இருந்த போதும் பல்வேறு சமூக கருத்துகளை தெரிவித்து வந்துள்ளார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்தார். அப்போது செய்தியாளரைகள் சந்தித்த மயில்சாமி, சென்னையில் 42 வருடமாக இருக்கிறேன். என்னுடைய ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் தான். அவரைத் தவிர யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மனது இடம்கொடுக்கவில்லை என கூறியிருந்தார்.
வீடு தேடி சென்று உதவும் மயில்சாமி
மேலும் விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கு என்னைத் தெரியும் அதனால் களமிறங்கியிருக்கிறேன். இத்தொகுதி மக்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் போட்டியிடுகிறேன் என தெரிவித்து இருந்தார். அதிமுக, திமுக மட்டுமில்லாமல் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக சினேகனும் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 1,435 வாக்குகள் பெற்று மயில்சாமி தோல்வியை தழுவினார். இருந்த போதும் தொடர்ந்து மக்களுக்கு தேவையான உதவிகளை தன்னால் முடிந்தவரை மயில்சாமி செய்துவந்தார். அனைவரின் அன்பையும் பெற்ற மயில்சாமியின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
Actor Mayilsamy passess away : பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார்