Asianet Tamil News Live: ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் ஸ்டார் - மாஸ் அப்டேட்!
Feb 5, 2023, 10:25 PM IST
![Tamil News live updates today on February 05 2023](https://static.asianetnews.com/images/default-img/default/default-image_768x330xt.jpg)
![Tamil News live updates today on February 05 2023](https://static-gi.asianetnews.com/images/01gj5ejfwjk534qrkhx2d7ktth/befunky-collage--12-_900x450xt.jpg)
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் தற்போது பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளார். ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில் ஷெட்டி நடிக்கும் நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10:25 PM
Kashmira Pardeshi: அடேங்கப்பா!.. நடிகை காஷ்மீரா பர்தேஷியின் செம்ம ஹாட் போட்டோஸ் - சும்மா அள்ளுது !!
நடிகை காஷ்மீரா பர்தேஷி இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
9:17 PM
தமிழ்நாடு வருமான வரித்துறையில் அருமையான வேலை!.. 10 ஆம் வகுப்பே போதும் - முழு விபரம் இதோ!!
தமிழ்நாடு வருமான வரித் துறையில் அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
6:08 PM
பேஷன் ஷோ நிகழ்ச்சியில் ‘திடீர்’ குண்டு வெடிப்பு.. நடிகை சன்னி லியோனுக்கு என்ன ஆச்சு.? வெளியான உண்மை தகவல்!
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருவது வாடிக்கை ஆகும்.
6:07 PM
AIADMK: எடப்பாடிக்கு என்ன பொறுப்பு.? உச்சநீதிமன்ற உத்தரவு எங்கே.? கடுப்பான ஓபிஎஸ் - குழப்பத்தில் அதிமுகவினர்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்றும், அதில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
3:36 PM
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மரணம்; பாஜகவை தாக்கிய சசி தரூர் - பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் !
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) துபாயில் இன்று காலமானார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூருக்கும், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கும் ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
2:50 PM
30 குண்டுகள் முழங்க... காவல்துறை மரியாதை உடன் பாடகி வாணி ஜெயராம் உடல் தகனம்
மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
2:30 PM
விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா - ஷூட்டிங் நிறுத்தம்
சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வரும் நடிகை சுதா கொங்கரா, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
1:20 PM
சேலை வாங்க கூடிய கூட்டம்.! நெரிசலில் சிக்கி 4 பேர் பலி.! திமுக அரசே பொறுப்பு- ஸ்டாலினை விமர்சிக்கும் இபிஎஸ்
பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால், தனியார் நிறுவன நிகழ்ச்சியில் வயது முதிர்ந்த 4 மகளிர் உயிரிழப்புக்கு, நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
12:47 PM
காவல்துறை மரியாதையோடு வாணி ஜெயராமுக்கு இறுதி அஞ்சலி..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பிரபல பின்னனி பாடகி வாணி ஜெயராம் மறைவையொட்டி காவல்துறை மரியாதையோடு இறுதி நிகழ்வு நடத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
11:54 AM
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்
உடல்நலக்குறைவல் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் இன்று காலமானார். அவருக்கு வயது 78. 1999-ல் ராணுவ புரட்சி மூலம் நவாஸ் ஷெரிப்பின் ஆட்சியை கவிழ்த்து பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷாரப் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது
11:30 AM
பாடகி வாணி ஜெயராம் உடல் காவல்துறை மரியாதை உடன் அடக்கம் செய்ய முதல்வர் உத்தரவு
பாடகி வாணி ஜெயராமின் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்க டிஜிபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
11:21 AM
என் பிள்ளைகளுக்கு ‘No Caste' சான்றிதழ் பெற முயற்சித்தேன்.. அதிகாரிகள் தர மறுத்துவிட்டனர் - வெற்றிமாறன் ஆதங்கம்
ஜாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் எனவும் விருப்பப்படுவோருக்கு ‘No caste' சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். மேலும் படிக்க
11:17 AM
வாணி ஜெயராம் பிரேத பரிசோதனை அறிக்கை
தமிழ் உள்பட 19 மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் மறைவு குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
9:40 AM
ஒரு பக்கம் உறவினர்... மறுபக்கம் நண்பர் - ஒரே நாளில் இரு மரணங்கள்... கலங்கிப்போன முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரே நாளில் நெருங்கிய உறவினரும், உயிருக்கு உயிரான நண்பனும் உயிரிழந்தது முதல்வர் மு.க.ஸ்டாலினை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க
9:24 AM
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளருக்கு முக்கிய பதவி வழங்கிய ஓபிஎஸ்..! அதிர்ச்சியில் எடப்பாடி
ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனுக்கு தனது அணியின் அமைப்பு செயலாளர் பதவி வழங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
8:28 AM
நெரிசலில் சிக்கி 4 பேர் பலி.! உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை தடை செய்திடுக..? தமிழக அரசுக்கு அன்புமணி அட்வைஸ்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த நிலையில், முறைப்படுத்தப்படாத உதவி வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
8:16 AM
பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்
பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. இவர் தமிழில் பாண்டி நாட்டு தங்கம், எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஆவார். மேலும் படிக்க
7:50 AM
துர்கா ஸ்டாலின் சகோதரி சாருமதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சகோதரி சாருமதி உடல்நலக்குறைவால் இன்று காலாமானர் அவருக்கு வயது 62, அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
7:47 AM
பொங்கல் தினத்தில் வங்கி தேர்வு நடத்திய மத்திய அரசு.! தைப்பூச தினத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடத்துவதா? சீமான்
தமிழ்நாட்டில் தைப்பூசம் திருவிழாவில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்வதால், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளிற்கு மாற்றவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.