30 குண்டுகள் முழங்க... காவல்துறை மரியாதை உடன் பாடகி வாணி ஜெயராம் உடல் தகனம்
மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்திய திரையுலகில், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட 19 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள வாணி ஜெயராம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று மதியம் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.அவரின் உடலை உடற்கூராய்வுக்காக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். உடற்கூராய்விற்குப் பிறகு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க..மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமின் கடைசி வீடியோ!.. ரசிகர்கள் சோகம் !!
இன்று காலை வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், வாணி ஜெயராம் உடல் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மேசை மீது விழுந்து தலையில் பலத்த அடி-காயம் தான் பிரபல பாடகி வாணி ஜெயராம் இறப்பிற்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க..ரிலீசுக்கு முன்பே ரூ.246 கோடியா!.. தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணின்னா சும்மாவா.! லியோ செய்த சாதனை!