Asianet News TamilAsianet News Tamil

விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா - ஷூட்டிங் நிறுத்தம்

சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வரும் நடிகை சுதா கொங்கரா, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Soorarai Pottru director Sudha Kongara injured in an accident
Author
First Published Feb 5, 2023, 2:21 PM IST

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் சுதா கொங்கரா. இதையடுத்து 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் அவர் இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

இதையடுத்து அப்படத்தை குரு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்த சுதா கொங்கரா, பின்னர் சூர்யாவுடன் கூட்டணி அமைத்து, அவரை வைத்து சூரரைப்போற்று என்கிற மாஸான திரைப்படத்தை இயக்கினார். இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு 5 தேசிய விருதுகளும் கிடைத்தன. 

இதையும் படியுங்கள்... என் பிள்ளைகளுக்கு ‘No Caste' சான்றிதழ் பெற முயற்சித்தேன்.. அதிகாரிகள் தர மறுத்துவிட்டனர் - வெற்றிமாறன் ஆதங்கம்

சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பின்னர், அப்படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் சுதா கொங்கரா. அப்படத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலிலும் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். கையில் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நன்கு வலிக்கிறது, எரிச்சலூட்டுகிறது. இன்னும் ஒரு மாதம் பிரேக்” என சோகமான எமோஜியுடன் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், விரைவில் நலம் பெற்று வாருங்கள் சகோதரி டுவிட் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்... லியோ படத்தால் மிஷ்கினுக்கு வந்த திடீர் மவுசு... குவியும் வாய்ப்புகளால் சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டாராம்

Follow Us:
Download App:
  • android
  • ios