Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மரணம்; பாஜகவை தாக்கிய சசி தரூர் - பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் !

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) துபாயில் இன்று காலமானார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூருக்கும், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கும் ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

Former Pakistan President Pervez Musharraf passes away Sasi Tharoor Attacks BJP Union Minister Rajeev Chandrasekhar Hits Back
Author
First Published Feb 5, 2023, 3:31 PM IST

நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் பர்வேஸ் முஷாரப். பர்வேஸ் முஷாரப் நீண்ட நாட்களாக அமிலாய்டோசிஸ் நோயினால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முஷாரப் இறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சசி தரூர் எம்.பி வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Former Pakistan President Pervez Musharraf passes away Sasi Tharoor Attacks BJP Union Minister Rajeev Chandrasekhar Hits Back

சசி தரூர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மரணம் அடைந்துள்ளார். ஒரு காலத்தில் இந்தியாவின் தவிர்க்கமுடியாத எதிரியாக இருந்தார். 2002-2007 ஆகிய ஆண்டுகளில் அமைதிக்கான உண்மையான சக்தியாக மாறினார். அந்த நாட்களில் நான் அவரை ஆண்டுதோறும் சந்தித்தேன். அவர் புத்திசாலியாகவும், திறமை வாய்ந்தவராகவும் இருந்தார் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பாகிஸ்தானை சேர்ந்த சர்வாதிகாரி அமைதிக்கான சக்தியாக மாறுவதற்கு, தெளிவான சிந்தனையை வளர்ப்பதற்கு சரியான  இராணுவத் தாக்குதலைப் போல எதுவும் இல்லை. பல உயிர்களை இழந்தாலும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டாலும், எல்லா இடங்களிலும் ஏற்படும் தீமைகளாலும், இந்த ஜெனரல்கள் இந்தியாவில் உள்ள தங்களின் ரசிகர்களை பாராட்டுவார்கள்' என்று காட்டமாக பதில் அளித்துள்ளார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

இதையும் படிங்க..மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமின் கடைசி வீடியோ!.. ரசிகர்கள் சோகம் !!

இதையும் படிங்க..ரிலீசுக்கு முன்பே ரூ.246 கோடியா!.. தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணின்னா சும்மாவா.! லியோ செய்த சாதனை!

Follow Us:
Download App:
  • android
  • ios