Published : Dec 13, 2022, 07:21 AM ISTUpdated : Dec 13, 2022, 10:31 PM IST

Asianet Tamil News Live: 2023ம் ஆண்டு திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடக்கும் - தமிழக அரசு !!

சுருக்கம்

Asianet Tamil News Live: 2023ம் ஆண்டு திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடக்கும் - தமிழக அரசு !!

10:31 PM (IST) Dec 13

தை அமாவாசை ஸ்பெஷல் - மதுரையிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில் - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா ?

மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தற்போது அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

09:42 PM (IST) Dec 13

அடிமைகளின் ஓலங்களும், சங்கிகளின் ஊளைகளும் கேட்கிறது.. எதிர்க்கட்சிகளுக்கு அதிரடி பதில் கொடுத்த டி.ஆர்.பி ராஜா

முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

மேலும் படிக்க

07:04 PM (IST) Dec 13

கழிவுநீர் தொட்டி மரணங்களில் 3வது இடத்தில் தமிழ்நாடு.. தொடரும் அவலம் ! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சக்கடைகளை சுத்தம் செய்யும் போது இறந்து போகும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 3வது இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

05:54 PM (IST) Dec 13

ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

ஜனவரி 4 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

05:25 PM (IST) Dec 13

2023ம் ஆண்டு திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடக்கும்.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ் !

வரும் 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

04:46 PM (IST) Dec 13

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் தெரியுமா ? முழு விபரம் இதோ

சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

03:28 PM (IST) Dec 13

அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி.. எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு - பங்கேற்பாரா ? வெளியே கசிந்த தகவல் !

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

03:20 PM (IST) Dec 13

பனையூரில் 4 மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்திப்பு

சென்னை பனையூரில் நடந்த முதல்கட்ட சந்திப்பில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்நிலையில், இன்று இரண்டாவது கட்டமாக செங்கல்பட்டு, அரியலூர், திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.  மேலும் படிக்க

02:52 PM (IST) Dec 13

எனக்கு ஓட்டு போட சொல்றேன்! போட மாட்டிக்கிறாங்க! நான் சொல்லி ரம்மி மட்டும் விளையாடிடுவாங்களா?சரத்குமார் ஆதங்கம்

ஆன்லைன் ரம்மியில் நான் மட்டும் இல்லை ஷாருக்கான் தோனி என அனைவரும் தான் நடிக்கின்றனர் என சரத்குமார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

02:52 PM (IST) Dec 13

உதயநிதி அமைச்சரான தமிழகத்தில் பாலாறு தேனாறு ஓட போகுதா.. வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவேன்.. இபிஎஸ் ஆவேசம்.!

நான் ஒரு விவசாயி, மழையையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைத்து வருகிறேன். திமுக ஆட்சியை அப்புறப்படுத்தும் வரை ஓய மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார். 

மேலும் படிக்க

02:43 PM (IST) Dec 13

ரொம்ப லேட்.. முன்னாடியே அமைச்சர் பதவி கொடுத்து இருக்கனும்.. ‘வாரிசு’ சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த பொன்முடி

உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க

12:50 PM (IST) Dec 13

அமைச்சராக பொறுப்பேற்றதும்... உதயநிதி ஸ்டாலின் செய்யப்போகும் முதல் வேலை இதுதானாம்! வெளியான தகவல்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் கலந்துகொள்ள உள்ள முதல் பிரம்மாண்ட நிகழ்ச்சி குறித்தும் ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது. மேலும் படிக்க

12:07 PM (IST) Dec 13

2023ல் திட்டமிட்டப்படி ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: தமிழ்நாடு அரசு

2023ம் ஆண்டு திட்டமிட்டப்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று  உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.

11:58 AM (IST) Dec 13

அத்துமீறல் புகார்... விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பீஸ்ட் பட வில்லன்

துபாயில் இருந்து கொச்சி செல்வதற்காக விமானத்தில் ஏறியபோது, விமானிகள் அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதன் காரணமாக பீஸ்ட் பட வில்லன் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார். மேலும் படிக்க

11:51 AM (IST) Dec 13

உதயநிதி அமைச்சர் பதவியேற்பு: எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி அமைச்சராக பதவியேற்கும் நிகழ்வுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

11:47 AM (IST) Dec 13

அமைச்சராகும் உதயநிதி! எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்க்கு அழைப்பு

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நாளை அமைச்சராக  உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கிறார். 

11:46 AM (IST) Dec 13

உதயநிதி எப்போது துணை முதல்வராவார் -பொன்முடி ஆவல்!!

உதயநிதி துணை முதல்வராவது எப்போது என ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன். அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர் உதயநிதி. அரசியல்வாதி பிள்ளைகளே அரசியலில் இருக்கக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா? எல்லா கட்சியிலயும் இருப்பதுதான். 10% வாரிசு இருக்கும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

11:44 AM (IST) Dec 13

திமுக அரசு மீது மக்கள் கொத்தளிப்பு: பழனிசாமி ஆவேசம்!!

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. சேலம் எடப்பாடியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசி வருகிறார்.

11:12 AM (IST) Dec 13

தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிப்பு!

விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் 60 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரடோல் பூச்சிக்கொல்லி மருந்திற்கு நிரந்தர தடையும் விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

10:45 AM (IST) Dec 13

பிரதமர் மோடியைக் கொல்லத் தயாராகுங்கள்! சர்ச்சையாகப் பேசிய காங்கிரஸ் தலைவர் கைது

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்க, பிரதமர் மோடியைக் கொல்லத் தயாராக  இருங்கள் என சர்ச்சைக்குரிய வகையில்  பேசிய மத்தியப்பிரதேச முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜா பட்டேரியாவை மத்தியப் பிரதேச போலீஸார் இன்று கைது செய்தனர் விரிவான செய்திகளுக்கு.......

10:13 AM (IST) Dec 13

கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வாகி... உலக அளவில் கெத்து காட்டும் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வாகி உள்ளது. மேலும் படிக்க

09:50 AM (IST) Dec 13

திருவண்ணாமலையில் பயங்கரம்... ஒரே குடும்பத்தில் 6 பேர் வெட்டிக் கொலை

திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி. மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக்  கொலை செய்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

09:32 AM (IST) Dec 13

மாஜி அமைச்சர் கொலையில் தொடர்பு?கோர்ட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய பிரபல ரவுடி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு திரும்பிய பிரபல ரவுடியை பட்டப்பகலில் 5 பேர் கொண்ட கும்பல் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

09:30 AM (IST) Dec 13

நின்றுகொண்டே தண்ணீர் குடிப்பது உடலில் இத்தனை பிரச்சனைகளை ஏற்படுமா?- எச்சரிக்கும் ஆலியா பட்டின் பிட்னஸ் டிரைனர்

நடிகை ஆலியா பட்டின் யோகா பயிற்சியாளரான அனுஷ்கா பர்வானி என்பவர் தண்ணீரை குடிப்பதற்காக சரியான நடைமுறையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.  மேலும் படிக்க

08:37 AM (IST) Dec 13

சந்தில் சிந்து பாடும் ஜெயக்குமார் ஒரு ஆளே இல்ல.. இறங்கிய அடிக்கும் டிடிவி.தினகரன்.. !

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் இணையவே மாட்டோம் என்று நான் பல முறை தெரிவித்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை தினமும் உறுதிப்படுத்தி வருகிறார். அதனால், அவரோடு ஒன்றிணைந்து செயல்பட மாட்டோம்.  ஆனால் அதே நேரத்தில் நான் திரும்பவும் சொல்கிறேன். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்கிருந்தாலும், எல்லோரும் ஒரு அணியில் சேர வேண்டும். 

மேலும் படிக்க

08:34 AM (IST) Dec 13

தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று விடுமுறை இல்லை

விழுப்புரம் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று விடுமுறை இல்லை. தலைமை ஆசிரியர்கள் பள்ளி கட்டிடங்களின் நிலைத்தன்மை, மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்தல், பள்ளி திறக்கப்படும் போது பாதுகாப்பான கல்வி சூழலை உறுதி செய்திடும் வகையில்  நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

07:54 AM (IST) Dec 13

லத்தி எடுத்து அடிக்க சொல்றது ஆர்டர் இல்லடா... ஆஃபர்! ஆக்‌ஷனில் மிரட்டும் விஷால் - வைரலாகும் ‘லத்தி’ பட டிரைலர்

அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் விஷால், சுனைனா நடிப்பில் உருவாகி உள்ள லத்தி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  மேலும் படிக்க

07:26 AM (IST) Dec 13

மு.க.ஸ்டாலின் முதல் தனுஷ் வரை... பிறந்தநாளன்று வாழ்த்தியவர்களுக்கு லிஸ்ட் போட்டு நன்றி சொன்ன ரஜினிகாந்த்

ரஜினியின் பிறந்தநாளன்று பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும் படிக்க

07:24 AM (IST) Dec 13

வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

07:24 AM (IST) Dec 13

தொங்கிக்கொண்டு செல்லும் தொங்கல் மேயர் பிரியா.. திமுக அரசுக்கு எதிராக எகிறும் ஜெயக்குமார்..!

முதலமைச்சர் கலந்து கொள்ளும் திறப்பு விழாவில், ரிப்பன் வெட்ட மேயர் கத்திரிக்கோல் தட்டை ஏந்தி நிற்கிறார். முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் தொங்கல் மேயராக உள்ளார். மேயரின் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க


More Trending News