Asianet News TamilAsianet News Tamil

அடிமைகளின் ஓலங்களும், சங்கிகளின் ஊளைகளும் கேட்கிறது.. எதிர்க்கட்சிகளுக்கு அதிரடி பதில் கொடுத்த டி.ஆர்.பி ராஜா

முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

Dmk it wing secretary trb rajaa reply criticism in udhayanithi stalin as minister
Author
First Published Dec 13, 2022, 9:39 PM IST

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதுதொடர்பாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்து, ஆளுநர் மாளிகைக்குப் பரிந்துரைத்துள்ளார். அதன்படி நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்க உள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி என்பது வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாகும் என்று எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் திமுக ஐடி விங் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி ராஜா ட்விட்டரில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், இருட்டை விரட்டி அடிக்கும் வலிமை சூரியனுக்கே உரியது. தமிழ்நாட்டின் பத்தாண்டு கால இருளை விரட்டிட ஓய்வறியா சூரியனாக உழைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான கழக அரசில் புதிய சூரியனாக ஒளிவிடுகிறார் சின்னவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்.

Dmk it wing secretary trb rajaa reply criticism in udhayanithi stalin as minister

இதையும் படிங்க..அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி.. எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு - பங்கேற்பாரா ? வெளியே கசிந்த தகவல் !

வழக்கம் போல அரசியல் நரிகளான அடிமைகளின் ஓலங்களும் சங்கிகளின் ஊளைகளும் கேட்கின்றன. அவர்கள் அப்படித்தான். நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது அவரது திறமை மிகுந்த செயல்பாடுகளைத்தான். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ஒரு பேரியக்கத்தின் இளைஞரணியைத் தலைமை தாங்கி சிறப்பாக செயல்படுபவர் அமைச்சராகும்போது அந்தத் துறையைச் சார்ந்தவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுவது இயல்பு. விளையாட்டுத் துறையில் ஈடுபடுபவர்கள் இளைஞர்கள்.

அவர்கள், friendly approachஉடன் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிப்பதற்கு எப்போதும் down-to-earthஆக இருக்கும் சின்னவர், அவர்களின் கோரிக்கையின் தன்மையை உணர்ந்து, உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு மிகப் பொருத்தமானவர். மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறையை வரலாறு காணாத வகையில் மேம்படுத்தி இந்திய அளவிலும் உலக அளவிலும் சாதனைகள் படைத்து, பதக்கங்களை வெல்லும் வீரர்-வீராங்கனைகளை உருவாக்குவதில் புதிய முனைப்புடனும் உத்வேகத்துடனும் செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு ! 

பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டிய சென்னை செஸ் ஒலிம்பியாட் அதற்கொரு simple sample. அதிலும் சின்னவரின் பங்கு முக்கியமானது. தொகுதிகள் தோறும் நவீன விளையாட்டரங்கம், சென்னைக்கு அருகே சர்வதேச தரத்திலான விளையாட்டு கிராமம்,உலகளாவிய போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு சிறப்புப் பரிசுகள் என விளையாட்டுத்து துறையை அணுஅணுவாக கவனித்து வளர்த்து வருகிறார் முதல்வர் அவருக்கு உற்றதுணையாக சின்னவரைத் தந்திருக்கிறது கழகம்.

இது விளையாட்டுத் துறையின் பொற்காலம். விளையாட்டுத் துறை மேம்பட்டால் இளைஞர்களின் திறமை மேம்படும்.வேலைவாய்ப்புகள் உருவாகும். மாநிலத்தின் திறனால் நாட்டிற்கே பெருமை சேரும். அதை நோக்கிய பெரும் பாய்ச்சலுக்குத் தமிழ்நாடு தயாராகிறது. விமர்சனங்கள் நொறுங்கும். சாதனைகள் பெருகும். இளைஞர்களே இது உங்களுக்கான ஆட்சி. காத்திருங்கள் பல புதிய முன்னெடுப்புகள் விரைவில்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..2023ம் ஆண்டு திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடக்கும்.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ் !

Follow Us:
Download App:
  • android
  • ios