அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி.. எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு - பங்கேற்பாரா ? வெளியே கசிந்த தகவல் !
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமாக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் தற்போது இடம் கிடைத்துள்ளது. நேற்று இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. உதயநிதி ஸ்டாலினை, அமைச்சரவையில் சேர்க்க ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையும் படிங்க.. ரொம்ப லேட்.. முன்னாடியே அமைச்சர் பதவி கொடுத்து இருக்கனும்.. ‘வாரிசு’ சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த பொன்முடி
இதையடுத்து பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையின் தர்பார் அரங்கில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, இந்த விழாவில் பங்கேற்பாரா ? அல்லது கலந்து கொள்ளாமல் இருப்பாரா ? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, உதயநிதி அமைச்சராகி விட்டால் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓட போகிறதா ? எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது.
அதற்கெல்லாம் உதயநிதி தலைமை தாங்கப் போகிறார் அவ்வளவுதான் ’ என்று கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் அமைச்சராக உதயநிதி பதவியேற்கும் விழாவில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதில் சந்தேகம் தான் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க.. 3 வருடங்களாக மூச்சு விட முடியாமல் அவதிப்படும் இளம் பெண்.. வேதனையில் கலெக்டருக்கு மனு !