சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. 

மேயரின் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வை மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இதனையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு சென்ற முதலமைச்சர், சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டார். மேலும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு செல்லும்போது, சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இதையும் படிங்க;- மேயர் பிரியா வாகனத்தில் தொங்கியதை கூட விட்டுடலாம்.. ஆனால்.. ஆளுங்கட்சியை இறங்கி அடிக்கும் பாஜக..!

இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் சேகர் பாபு;- மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. அதை அவரது துணிச்சலாக பார்க்க வேண்டும். ஆய்வின் போது முதல்வருடன் செல்ல வேண்டும் என்பதற்காக சென்னை மேயர் பிரியா துணிச்சலுடன் முதல்வர் பாதுகாப்பு வாகனத்தில் ஏறினார் என விளக்கமளித்தார். 

இருப்பினும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை பெண் மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது. முதலமைச்சர் கலந்து கொள்ளும் திறப்பு விழாவில், ரிப்பன் வெட்ட மேயர் கத்திரிக்கோல் தட்டை ஏந்தி நிற்கிறார். முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் தொங்கல் மேயராக உள்ளார். மேயரின் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட அம்மா ஆண்ட இந்த மண்ணில் இப்படி ஒரு இழுக்கு ஏற்பட்டுள்ளது என ஜெயக்குமார் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- அதிகார துஷ்பிரயோகம் அல்ல.. அது மேயர் பிரியாவின் துணிச்சல்.. அமைச்சர் சேகர் பாபு சப்போர்ட்..!