அதிகார துஷ்பிரயோகம் அல்ல.. அது மேயர் பிரியாவின் துணிச்சல்.. அமைச்சர் சேகர் பாபு சப்போர்ட்..!
சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது.
மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதலமைச்சர் கான்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. அதை அவரது துணிச்சலாக பார்க்க வேண்டும் என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
வங்க கடலில் உருவாகி மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதனையடுத்து, மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வை மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இதனையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு சென்ற முதலமைச்சர், சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டார். மேலும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதையும் படிங்க;- மேயர் பிரியா வாகனத்தில் தொங்கியதை கூட விட்டுடலாம்.. ஆனால்.. ஆளுங்கட்சியை இறங்கி அடிக்கும் பாஜக..!
இந்த நிகழ்ச்சிக்கு செல்லும்போது, சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
இது தொடர்பாக விளக்கமளித்த இந்துஅறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு;- மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மேயர் பிரியா முதலமைச்சர் கன்வாய் வாகனத்தில் தொங்கிய படி சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. அதை அவரது துணிச்சலாக பார்க்க வேண்டும். ஆய்வின் போது முதல்வருடன் செல்ல வேண்டும் என்பதற்காக சென்னை மேயர் பிரியா துணிச்சலுடன் முதல்வர் பாதுகாப்பு வாகனத்தில் ஏறினார் என விளக்கமளித்துள்ளார்.
மேலும், அறநிலையத்துறை அதிகாரிகள் ஓபிஎஸ் மகனுக்கு ஆதரவாக செயல்பட்டார்களா என விசாரணை. புகார் தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- மாண்டஸ் புயலால் சாதரண காற்று,மழை தான் ! மக்களை காப்பாற்றியது போல் பில்டப் செய்யும் ஸ்டாலின்.? இபிஎஸ் ஆவேசம்