சந்தில் சிந்து பாடும் ஜெயக்குமார் ஒரு ஆளே இல்ல.. இறங்கிய அடிக்கும் டிடிவி.தினகரன்.. !

4 ஆண்டுகால திருவிளையாடலை மக்களால் பொறுத்து கொள்ள முடியாத சூழலில்தான் 10 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த திமுகவினர் திருந்தி இருப்பார்கள் என்று நினைத்து தான் ஆட்சியை கொடுத்தார்கள். 

ttv dhinakaran slams jayakumar

எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை தினமும் உறுதிப்படுத்தி வருகிறார் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்;- எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் இணையவே மாட்டோம் என்று நான் பல முறை தெரிவித்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை தினமும் உறுதிப்படுத்தி வருகிறார். அதனால், அவரோடு ஒன்றிணைந்து செயல்பட மாட்டோம்.  ஆனால் அதே நேரத்தில் நான் திரும்பவும் சொல்கிறேன். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்கிருந்தாலும், எல்லோரும் ஒரு அணியில் சேர வேண்டும். 

இதையும் படிங்க;- அசுர பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்த இதை செய்தால் மட்டுமே முடியும்! ஸ்டாலினை வீழ்த்த ஐடியா கொடுக்கும் TTV

ttv dhinakaran slams jayakumar

4 ஆண்டுகால திருவிளையாடலை மக்களால் பொறுத்து கொள்ள முடியாத சூழலில்தான் 10 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த திமுகவினர் திருந்தி இருப்பார்கள் என்று நினைத்து தான் ஆட்சியை கொடுத்தார்கள். ஆனால், அவர்கள் இன்னும் திருந்தவில்லை. திமுக சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுகின்ற ஆட்சி தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

ttv dhinakaran slams jayakumar

ஆட்சி அதிகாரம் மற்றும் ஊடகம் வெளிச்சம் இருப்பதால் திமுகவினரை நிறையே பேர் தூக்கிப்பிடித்து கொண்டிருக்கின்றனர். மக்கள் மிகுந்த வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் இருந்து வருகிறார்கள். இது நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வெளிப்படும். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சி ஒன்றுடன் அமமுக கூட்டணி அமைத்து போட்டியிடும். 

ttv dhinakaran slams jayakumar

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். ஆளுநர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வரும் நிலையில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார். மேலும், சந்தில் சிந்து பாடுவதுபோல் பேசும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என  டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் இது தான் நடக்கும்.. பங்கமாய் கலாய்க்கும் டிடிவி.தினகரன்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios